பாடப் புத்தகத்தில் புகைப் படமாக பார்த்த டைனோசரை உயிரோடு கண் முன் கொண்டு வந்து நிறுத்திய படம் ’ஜூராஸிக் பார்க்’. நம்மில் பலர் இப்போதும் டி.வி.,யில் அந்தப் படத்தைப் போட்டால் சலிக்காமல் பார்ப்பதற்கு காரணம்
கிராபிக்ஸ் உள்ளிட்ட அத்திரைப் படத்தின் மலைக்க வைக்க தொழில் நுட்ப விஷயங் கள். ஆனால் அதன் தொழில் நுட்பம் குறித்து சமீபத்தில் வெளியான தகவல் ’ஜூராஸிக் பார்க்’ ரசிகர்களை வெட்கப்பட வைத்து ள்ளது.
1993-ம் ஆண்டு வெளியான ‘ஜூராஸிக் பார்க்’ படத்தில் சமைய லறைக்குள் 2 குட்டி டைனோ சர்கள் நுழைந்து உருமும் காட்சியும்,
அந்த சத்தத்தைக் கேட்டு ஒரு குட்டிப் பையனும் அவனது அக்காவும் சத்தம் போடாமல் மரண பயத்தில் உறைந்து போய் அமர்ந்தி ருக்கும் காட்சியும் நிச்சயம் நமக்கு நினை விருக்கும்.
சமீபத்தில் சான் பிரான்சிஸ் கோவில் உள்ள பிரபல செய்தி வலை தளத்திற்கு அளித்த பேட்டியில் அந்தப் படத்தின் ஒலி வடிவமைப் பளரான கேரி ரிட்ஸ்டார்ம், சமைய லறைக் காட்சியின் போது
ஒரு குட்டி டைனோசரின் குரலுக்காக 2 ஆமைகள் உடலுறவு கொள்ளும் போது எழுப்பும் சத்தத்தைப் பயன் படுத்திய தாகவும்,
இன்னொரு டைனோச ருக்கு கழுதை, பூனை, குதிரை, நாய் என்று பல விலங்கு களின் குரலை ஒன்றாகச் சேர்த்து பயன் படுத்திய தாகவும் தெரிவித் துள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூராஸிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் வெளியா கிறது. இந்த படத்திற் கான டிரைலரிலும் ’குட்டி டைனோசர்’ இருக்கிறது. அதற்கு யார் குரல் கொடுத்தி ருக்கிறார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம்.......