இந்த வருடம் ரமழான் நோன்பு : ஐரோப்பாவில் 19 மணி நேரங்கள் !

இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.


இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணி நேரங்கள்அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர்.

அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணி நேரங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர்.

இந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் 18 அல்லது 19 மணி &n நேரங்கள் நோன்பு நோற்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாலை 4 மணியிலிருந்து மாலை 7 மணிவரை சராசரியாக நோன்பு நோற்கின்றனர்.


இதனடிப்படையில் 15 மணி நேரங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் நோன்பு நோற்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings