இங்கிலாந்திலுள்ள ஆடை விற்பனை நிலை யமொன்றில் மிக மெல்லிய இடையுடன் காணப்பட்ட மனித பொம்மையொன்று எதிர்ப்புகளை யடுத்து அகற்றப்பட்டுள்ளது.
கென்ட் பிராந்தியத்திலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த இந்த பொம்மையானது யதார்த்தத்துக்கு முரணான வகையில் மிகக் குறுகிய இடையைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
இளம் பெண்களிடம் உடல் அழகு குறித்த தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும், இந்த பொம்மையை பார்க்கும் இளம் பெண்கள், தாமும் இத்தகைய குறுகிய இடையை பெற வேண்டும்
என விரும்புவதால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை கடை பிடிக்கக் கூடும் என பலர் தெரிவித்தி ருந்தனர்.
சமூக வலைத் தளங்களிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மேற்படி
பொம்மை யை காட்சி அறையிலிருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அந்த ஆடை விற்பனை நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.