ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற் சாலையில் ரோபோ ஒன்று ஊழியர் ஒருவரை கொன்ற சம்பவம் பணியாளர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இது குறித்து ஜெர்மனி வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, உற்பத்தி பிரிவை சேர்ந்த
கார் பாகங்களை கையாளும் ரோபோ ஒன்றை சீரமைக்கும் பணியில் 22 வயது இளைஞர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இளைஞரை கவ்வி பிடித்த ரோபோ அவரை உலோக தகட்டோடு வைத்து அழுத்தி யுள்ளது.
இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்து விட்டார், என்று கூறினார். மேலும் பலியான இளைஞர் பற்றிய விபரங்களை வெளியிட நிர்வாகம் மறுத்து விட்டது.
மேலும் இந்த விபத்திற்கு மனித தவறு தான் காரணம் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஊழியரை ரோபோ கொன்ற சம்பவம் தற்போது ஜெர்மனியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.