கேட்டரிங் வேன் மோதி சவுதி விமானம் சேதம் !

பயணிகளுக்கு உணவு வகைகளை சப்ளை செய்வதற்காக ஓடு பாதைக்குள் வந்த கேட்டரிங் வாகனம் மோதி சவுதி அரசுக்கு சொந்தமான ஏர் பஸ் A320 ரக விமானம் சேதம் அடைந்தது.
கேட்டரிங் வேன் மோதி சவுதி விமானம் சேதம் !
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள அரசர் காலிட் அல் துகைய்ஷர் விமான நிலையத்தில் இருந்து அபா நகருக்கு செல்வதற்காக ஏர் பஸ் A320 ரக விமானம் ஒன்று நின்று கொண்டிருந்தது. 

அப்போது விமான பயணிகளுக்கு உணவு வகைகளை சப்ளை செய்வதற்காக ஒடு பாதைக்குள் கேட்டரிங் வாகனம் ஒன்று வந்தது. 

அப்போது அந்த வாகனம் ஏர் பஸ் A320 மீது எதிர் பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வலது இறக்கை சேதமடைந்தது. 

இதனைத் தொடர்ந்து ஏர் பஸ் A320 பழுது பார்ப்பதற்காக பணி மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கேட்டரிங் வாகனம் மோதிய போது விமானத்திற்குள் பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இந்த விபத்தில் கேட்டரிங் வாகன ஓட்டுநர் 

லேசனாக காயமடைந்து மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர்  ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings