மனதை ஒரு முகப்படுத்துவதற்கான எளிய வழிகள் !

எங்கு பார்த்தாலும், கவனத்தைத் திசை திருப்பும் விஷயங்கள். செய்யும் வேலையில் கவனத்தைச் செலுத்துவது கடினமாகிக் கொண்டு வருகிறது. 
மனதை ஒரு முகப்படுத்துவதற்கான எளிய வழிகள்



நம்மைச் சுற்றி நடக்கும் கூச்சல் குழப்பங்களுக் கிடையேயும், அவற்றைக் கண்டு கொள்ளாமல் பணி புரிவது சிரமம்.

ஏனெனில், நமது புலன்கள் சுற்றுப்புற நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருக்கும்படி வடிவமைக்கப் பட்டவை அல்ல. ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு காட்சியும், நமது புலன்கள் வழியாக நமது மூளையை அடைந்து, கவனத்தைத் திசை திருப்பும் பணியைச் சிறப்பாகச் செய்யும். 

மனமானது ஒரு குரங்கு என்பார்கள். அதனை ஒரு இடத்தில் நிலையாக உட்கார வைப்பது மிக கடினம். மனதை ஒருமுகப்படுத்துவது கடினம் தான் என்றாலும், அது முற்றிலும் முடியாத விஷயம் அல்ல. 

மனதின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்துக் கொள்ள தேவையானது விடாமுயற்சி ஆகும். எனவே மனதை ஒருமுகப் படுத்துவதற் கான சிறந்த பயிற்சி களைத் தேர்ந்தெடுத்து கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், மனதை ஒருமுகப்படுவது எளிது. சரி, அதைப் பார்ப்போமா!

சுற்றுச்சூழல் 

எந்த சூழலில் அமர்ந்து பணிபுரிகிறோமோ, அது மனதை ஒருமுகப் படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. மனதிற்கு இதமான மற்றும் வசதியான சூழ்நிலையில் பணிபுரியும் போது, பணியில் மிகவும் அதிகமாகக் கவனத்தைச் செலுத்த முடியும்.

எண்ணங்கள் 

மனதை ஒருமுகப் படுத்துதலின் ரகசியம் என்ன வென்றால், சாதாரண எண்ணங்களால் மனதை குழப்பமால் பார்த்துக் கொள்வது தான். பணிக்கு சற்றும் தொடர் பில்லாத நினைவுகள் எழுந்தால்,

அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமல், பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு, கவனம் முழுவதையும், பணியில் மட்டும் செலுத்தவும்.
நேரம் 

செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மிகவும் அவசரமான வேலை, சாதாரணமான வேலை என்று முக்கியத்துவத்தைப் பொறுத்து நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும். 

குறிப்பாக நேரத்தினை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதே, பணியில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவும். இப்படிச் செய்து கொண்டால், சிறுசிறு நிகழ்ச்சிகளால் கூட கவனத்தைத் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எதிர்மறை எண்ணங்கள் 

எப்போதும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று சொல்லக்கூடாது. அதனால் மனம் நம்பிக்கை இழந்து எதிர்மறையாக நினைக்கத் தொடங்கும்.

அதன் பின், மனதை வற்புறுத்தி பணிபுரியத் தொடங்கும் போது, அது ஒத்துழைக்காமல் போகும். எனவே எப்போதும் என்னால் முடியும் என்றே நினைக்க வேண்டும்.

பல பணிகள் 

ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்ய வேண்டிய சூழல் வந்துவிட்டால், நம்மால் எந்த ஒரு பணியிலும் மனதைத் தீவிரமாகச் செலுத்த முடியாமல் போய்விடும்.

எனவே ஒவ்வொரு பணியாக முழுமனதுடன் செய்து முடித்து, அதன்பின் அடுத்த பணிக்கு செல்ல வேண்டும். இதனால் அனைத்து பணிகளும் அழகாக முடிந்திருக்கும். 

சத்தம் 

நம்மை சுற்றி சத்தமாக இருந்தால், பணியில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, செல்போனில் அலர்ட்டுகளை செட் செய்து வைத்திருந்தீர்கள் என்றால், அவை சத்தமெழுப்பி அவற்றை நோக்கி கவனிக்க வைத்து வந்த செய்திகளுக்கு பதிலளிக்க வைக்கும். 

கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டே இருக்கும். இறுதியில் செய்ய வேண்டிய பணிகள் தடை பட்டிருக்கும். முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் போது செல்போன்களை, ஆஃப் செய்யவும்.
சத்தம்



உணவும் உடற்பயிற்சியும் 

மனதை ஒரு முகப்படுத்துவதில், சரிவிகித உணவுக்கும் உடற் பயிற்சிகளுக்கும் நல்லதொரு பங்குண்டு. தேவையான ஊட்ட சத்துக்கள் உடலுக்கு இல்லையென்றால், அது மயக்கத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும். 

வைட்டமின் ஈ உள்ள பருப்புகளையும், பழங்களையும் அதிகம் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் சில உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

புரிந்து கொளுங்கள் 

செய்யும் பணியை பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதில் இறங்கினால், மனதினை அதில் முழுமையாகச் செலுத்த முடியாது. அது குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, முதலில் செய்ய வேண்டிய பணியினைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

செய்யும் பணி கடினமாக இருந்தால், நமது மனம் எளிதான பணிகளை நாடத் தொடங்கிவிடும். எனவே பணிகளை செய்யத் தொடங்கும் முன்னதாக, அப்பணிகளைப் பற்றிய ஒரு எளிமையான அடிப்படைக் கட்டமைப்பினையும், செயல் திட்டத்தினையும், வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

தள்ளிப் போடக்கூடாது 

பணிகளைச் செய்வதை தள்ளிப் போட விரும்புகிறீர்களா? எப்போதுமே பணிகளைச் செய்வதைத் தள்ளிப் போட கூடாது. எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், அதை முடித்துவிட்டு தான் இருக்கையை விட்டு எழுந்திருப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்பான நேரம் 

அனைவருக்கும் இருப்பது 24 மணிநேரம் தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் ஏதாவது ஒரு நேரத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

அப்படிப்பட்ட நேரத்தினைக் கண்டறிந்து கொண்டு, மிகவும் சவாலான பணிகளை இந்த நேரத்தில் செய்து முடிக்கலாம்.
சிறப்பான நேரம்



நேர்மறையான எண்ணுங்கள் 

மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தால், என்னால் எனது மனதை ஒருமுகப்படுத்த முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு செய்யதால் உங்களை அறியாமலேயே ஒருமுகப்படுத்தும் திறனை அதிகமாகும்.
பணிகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும் 

தெளிவான தொடக்கமும், தெளிவான முடிவும் இல்லாமல் பணிகளைத் தொடங்கினால், அது குழப்பத்தில் கொண்டு போய் விட்டுவிடும். ஒரு பெரிய பணியினைச் செய்ய வேண்டியிருந்தால், அதனை சிறு சிறு பணிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். 

பின் எதனை முதலில் தொடங்குவது, எவற்றை ஒரே சமயத்தில் செய்வது, எப்படி அவை எல்லாவற்றையும் இறுதியில் ஒருங்கிணைத்து முடிப்பது என்று திட்டமிட்டு, அதன் பின் பணியைச் செய்யத் தொடங்க வேண்டும்.

ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் 

இழந்த சக்தியை மீண்டும் அளிக்கவும், ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கவும், மன ஒருமைப்பாட்டிற்கும் சில பயிற்சிகள் உதவுகின்றன. மனதை ஒரு முகப்படுத்துதலானது, நினைவாற்றல் தொடர்புடையது.

இதனை அதிகரிக்க உதவும் காயின் ட்ரிக் மற்றும் நாற்காலி ட்ரிக் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.

தியானம் 

தியானம் என்பது ஒரு சிகிச்சையல்ல. ஆனால் இதனைக் கற்றுக் கொண்டு முறையாகச் செய்து வந்தால், மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இதனால் ஏதோ ஒரு வேறுபாட்டினை உணரத் தொடங்குவதோடு, மன ஒருமுகப்படுத்தும் திறன் மெல்ல வளர்வதையும் உணர்வோம்.

நிதானம் 

ஒரு பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட, அதில் அதிக நேரம் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமையலாம். எனவே மனம் முழுவதையும் செலுத்தி போதுமான நேரம் எடுத்துக் கொண்டு, நிதானமாக அதனைச் செய்தால், அப்பணி சிறப்பாக நிறைவடையும்.
நிதானம்



பழக்கப்படுத்தவும் 

மனதை ஒருமுகப்படுத்துவதற்கு மூளையைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்குப் போதுமான பயிற்சி கொடுக்க வேண்டும். ஒரு பொருள் மீது சில வினாடிகளுக்கு மேல் கவனத்தைச் செலுத்த முடியவில்லை என்றாலும் கூட, அதை தொடர்சியாக பயிற்சி செய்வதன் முலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.

காலக்கெடு 

மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் நின்று கட்டாயப்படுத்தி அதனை முடிக்க வைத்துவிடும். 

தூக்கம் 

நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.

சீரான முன்னேற்றம்

மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.

இதயமும் மனமும் 

இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து,

ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.
Tags:
Privacy and cookie settings