எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது. எந்த நேரத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் போன்ற வற்றை எல்லாம், சொல்லிக் கொடுக்க, பெற்றோருக்கு நேரமில்லை, தாத்தா, பாட்டி உடனில்லை.
ஆகையால் தான் குறிகிய காலக்கட்டதில் நமது வாழ்வியல் முறையில் பல வேறுபாடுகளும். உடல் நலத்தில் குறைபாடுகளும் கண்டு வருகிறோம்.
நீங்கள் இரவு வேளையில் செய்யும் சில வேலைகள், மறுநாள் காலை உங்களை சுறுசுறுப்பாகவும், உடல் இலகுவாகவும் இருக்க உதவும்....
இரவு ஏழு மணிக்கு மேல், காபி குடிக்கும் பழக்கத் திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தயும், தூக்கத்தையும், பாதிக்கும்.
நாளை நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை திட்டமிட்டு வையுங்கள். இரவு தூங்க செல்லும் முன்பு குளிக்க வேண்டியது அவசியம்.
ஏனெனில், இது, உங்கள் உடலை இலகவா க்குவது மட்டுமின்றி, நல்ல உறக்கம் வரவும் உதுவும். இது உங்களை அடுத்த நாளும் சுறுசு றுப்பாக இயங்க உதவும் பழக்கமாகும்.
குழந்தைகளுக்கு என்ன வேண்டும், அவர்களது வேலைகள் என்னென்ன எல்லாம் மிச்சம் இருக்கிறது என்று ஒரு முறை சோதித்து பார்த்துக் கொள்வது வேண்டும்.
தேவையில்லாமல் மறுநாள் காலை அடித்துப் பிடித்து வேலை செய்வதை தவிர்க்க இது உதவும்.
காலை அவசரமாக நீங்கள் கிளம்புவது மட்டுமின்றி மற்றவர்களையும், அவசரப் படுத்தாமல் நீங்களே, நாளை நீங்கள் உடுத்தும் உடைகளை இஸ்திரி செய்து வைத்துக்கொள்வது ஓர் நல்ல பழக்கம் ஆகும்.
டிவி, கணினி, விளக்குகள் போன்ற மின்னணு உபகரண ங்களை ஒரு மணிநேரத் திற்கு முன்பே அனைத்து வைத்து விடுங்கள்.
இரவு தூங்கு வதற்கு முன்பு புத்தகம் படிக்கும் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ளு ங்கள். இது, உங்கள் நினை வாற்றல், நல்ல உறக்கம் மற்றும், சுறுசுறு ப்பான காலை பொழுதுக்கு வழி வகுக்கும்.
இரவு தூங்கும் முன்னரே, அறையை சுத்தம் செய்து விட்டு தூங்க வேண்டியது அவசியம். இது, சுவாச பிரச்சனைகள் ஏற்படாது இருக்க உதவும், நல்ல உறக்கத்தை கொடுக்கும்.
பெரும்பாலும் அனை வரும் இதை பின்பற்ற வேண்டுடிய பழக்கம் இதுவாகும். சிலர் தூங்கும் அறையில் விளக்கை அணைக் காமலே உறங்கு வார்கள். இது, உங்கள் உடலில் சுரக்கும் சுரப்பியின் அளவை குறைத்து விடுமாம்.
எனவே, இரவு தூங்கும் போது, அந்த அறையில் இருக்கும் விளக் குகளை அணைத்து விடுங்கள்.
முடிந்த வரை குறைந்தது 5-10 நிமிடங்களாவது இரவு உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது, செரிமானத்தை சீராக்கு வதற்கு உதவும்.