ஸ்பெயின் நாட்டில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸாரகோஸா நகர் அருகே ஒரு முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது.
இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு திடீரென தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவியது. அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.
உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 8 ஓய்வூதியதாரர்கள் உயிரிழந்தனர்.
பராமரிப்பாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.