ஒன்றுக்கு எழுபது மடங்கு இறைவனிடமிருந்து இந்த ரமலான் மாதத்தில் நற்கூலி கிடைப்பதால் மற்ற மாதங்களில் நல்லறங்கள் செய்வதை விடவும் இந்த ரமலானில் அதிகமான
நற்கருமங்களை முஸ்லிம்கள் தமது தகுதிக்கேற்ப செய்து வருவதை உலகெங்கும் காண முடியும்.அந்த வரிசையில் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்
தமது அரசின் சிறைகளில் கைதிகளாக இருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்யும் நிகழ்வு ஒவ்வொரு ரமலானிலும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ரமலானை முன்னிட்டு அந்த நாட்டு சிறைகளில் இருக்கும் கைதிகளில் ஆயிரக்கணக்கானோரை விடுதலை செய்ய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அமீரகத்தின் அதிபரும் அபுதாபி மாகாண ஆட்சியாளருமான ஷேக் கலிஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் தனது பங்காக 879 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் தரவேண்டிய அபாராதத் தொகைக்கு தாமே பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அமீரகத்தின் துணை அதிபரும்,பிரதமரும்,துபை மாகாண ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் துபை சிறையிலிருக்கும் 734 கைதிகளுக்கும்,
அமீரகத்தின் உயர் நிலைக்குழுவின் உறுப்பினரும் அஜ்மான் மாகாண ஆட்சியாளருமான ஷேக் ஹூமைத் பின் ராஷித் அல் நுஅய்மி அஜ்மான் சிறையில்
இருக்கும் 119 கைதிகளுக்கும் அமீரகத்தின் உயர் நிலைக்குழுவின் உறுப்பினரும் உம் அல் குவைன் மாகாண ஆட்சியாளருமான ஷேக் சவூத் பின் ராஷித் அல் முஅல்லா
தமது மாகாண சிறைவாசிகளில் ஏராளமானோருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
கைதிகளிடையே நற்பண்புகளை ஊக்குவிக்கவும் சமூகத்தில் அவர்களை நல்ல குடிமக்களாக வார்த் தெடுக்கவும் ஆட்சியா ளர்களின் இந்த நடவடிக்கை பெரிதும் உதவி கரமானதாக இருக்கும்
என அமீரகங்களின் அரசின் சார்பில் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமீரகங்களின் மற்ற ஆட்சியாளர்களிடமிருந்தும் இத்தகைய பொது மன்னிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.