அமெரிக்க ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது !

அமெரிக்காவில் விண்வெளிக்குப் புறப்பட்டு சென்றட சில நொடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது !
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் கேப் கெனாவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் என்ற

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான பால்கான் 9 ராக்கெட், நேற்று மதியம் ஏவப்படுவது அந்நிறுவனத்தின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டி ருந்தது. 

கவுண்ட் டவுண் முடிந்ததும் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட்டின் முதல் பகுதி பிரிவதற்கு முன்பாகவே அது, புறப்பட்ட 2.19 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது.

இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, ராக்கெட்டுடனான வீடியோ தொடர்பு முழுவதுமாக செயலிழந்து விட்டதாக தெரிவித்தார். 
இச்சம்பவத்தால் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான  நாசா அதிர்ச்சி அடைந்துள்ளது. 

வெடித்து சிதறிய அந்த ராக்கெட்டில், 1,800 கிலோ பொருட்களும், கருவிகளும் இருந்துள்ளன. 

மனிதர்கள் யாரும் அந்த ராக்கெட்டில் செல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனாலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings