ஏழை பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய்..

உத்தரபிரதேசத்தில் உள்ள பெண்ணின் வங்கி கணக்கில் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தில் உள்ள வங்கி கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் இருந்ததால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் ஊர்மிளா யாதவ், இவர் பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தில் இணைவதற்காக அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் ரூ 2,000 கொண்டு வங்கி கணக்கதை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரது செல்போனிற்கு சமீபத்தில் வங்கி கணக்கில் ரூ.95 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்மிளா சந்தோஷத்தில் திளைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அடுத்த சில நொடிகளில் மறுபடியும் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில்  9,99,999 ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதில் 9,97,000 ரூபாய் எடுக்கப்பட்டது போக மீதம் 2 ஆயிரம் ரூபாய் இருப்பதாக வந்தது.

இதனை உண்மை தானா  என்று அறிந்து கொள்வதற்காக வங்கிக்கு சென்ற ஊர்மிளா பாஸ்புக் கணக்கை வரவு வைத்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

இது தொடர்பாக அவருக்கு உத்தரவாதம் கையெழுத்து போட்ட ஒருவர் வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அதற்கு விளக்கம் அளித்தனர்.

ஊர்மிளா யாதவ் வங்கி கணக்கு தொடங்கும் போது ரூ.2000 கட்டி தொடங்கி உள்ளார். அதனை தொடர்ந்து முழுமையாக துடைத்து எடுத்துவிட்டார். இதனால் வங்கியின் வரவு கணக்கு பார்க்கும் போது ஊர்மிளாவின் வங்கி கணக்கு காலியாக இருந்தது.

அவரது வங்கி கணக்கை மூட நினைத்தனர். அவரது வரவு- செலவு தொடர்பான விபரங்களை கணக்கிடும் போது இந்தப் பிழை தவறுதலாக நேர்ந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து ஊர்மிளா யாதவ் கூறுகையில்,

நான் கட்டிய அசல் தொகை எனக்கு வந்தால் போதும் இதனால் நான் நீதி மன்றத்திற்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings