விமான நிலையத்தில் ரூ. 4.2 கோடி மதிப்பிலான பேக் காணாமல் போனது !

ஹாங்ஹாங் விமான நிலையத்தில் ரூ. 4.2 கோடி மதிப்பிலான நியூசிலாந்து டாலர்களுடன் பேக் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
விமான நிலையத்தில் ரூ. 4.2 கோடி மதிப்பிலான பேக் காணாமல் போனது !
ஹாங்ஹாங் சர்வதேச விமான நிலையத்தில் டிராலி இருந்து புறப்பட்டு சென்றபோது பணம் கிழே விழுந்து விட்டது என்று கூறப்படுகிறது. 

நியூசிலாந்தில் இருந்து சீனாவிற்கு, பாங்க் ஆப் சீனா வங்கிக்கு சுமார் 13 பேக்குகளில் 10 மில்லியன் நியூசிலாந்து டாலர்கள் கொண்டு செல்லப்பட்டது.

ஒவ்வொரு பேக்கிலும் தலா 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்கள் (ரூ. 4.2 கோடி) இருந்தது என்று சீனா செய்திநிறுவனம் தெரிவித்து உள்ளது.

கேத்தே பசிபிக் விமானத்தில் கடந்த வெள்ளி கிழமை அன்று 13 பேக்குகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் இருந்து பணம் இறக்கப்பட்ட பின்னர் டிராலியில் ஏற்றப்பட்டு உள்ளது.

விமானத்தில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்ட போது, திருப்பம் ஒன்றில் டிராலி திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது தான் பணம் கீழே விழுந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
விமான நிலையத்தில் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களுடன் (ரூ. 4.2 கோடி) பேக் காணமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தில் டிராலி திரும்பிய போது, சுமார் 3 பைகள் கிழே விழுந்து உள்ளது. இதில் ஒரு பேக்கே காணமல் போய் உள்ளது என்று சீன செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

விமான நிலையத்தில் பாதுகாவலர் இல்லாமல் பணம் டிரைவரால் இறக்கப்பட்டு உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தில் பணம் அடங்கிய பேக் விழுந்து, இது வரையில் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது வரையில் எந்தஒரு குழுவும் அதிகாரிகளுக்கு தெரிய வரவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான பேக்கானது திருடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். விமானம் இறங்கியதும், மதிப்புமிக்க பேக்குகள் அனைத்தும், 

விமான நிலைய வாகனத்திற்கு நாங்கள் மாற்றி விட்டோம். பின்னரே விமான நிலையத்தில் பணம் அடங்கிய பேக்கானது காணாமல் போய் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர், 
எனவே இவ்விவகாரம் தொடர்பாக நாங்கள் எந்தஒரு விரிவான தகவலையும் நாங்கள் தெரிவிக்க முடியாது என்று கேத்தே பசிபிக் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

G4S சர்வதேச லாஜிஸ்டிக்ஸ், நிறுவனம் பணத்தை பாங்க் ஆப் சீனாவிற்கு மாற்றி உள்ளது, 

பணமானது விமான நிலைய கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் வரையில் பத்திரமாக இருந்தது, குறிப்பிட்ட பிரிவானது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலே உள்ளது,

அங்கு எங்களுடைய பணியாளர்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி உள்ளது. பணமானது காப்பீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Tags:
Privacy and cookie settings