லண்டனிலிருந்து மீரா அலி ராஜாய் லண்டனின் ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழ் இருந்து வெளியேறிய மின் தீ காரணமாக அப்பகுதியில் அசாதாரண நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு பெரும் பதட்டம் காணப்பட்டது. இந்த பகுதியை அண்மித்து காணப்பட்ட கட்டிடங்களிருந்து சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் அப்பகுதியை சாதாரண நிலைக்கு கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் .
மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வரை தீயை அணைக்காமல் தீயணைப்பு துறையினர் காத்திருக்க வேண்டியதா யிருந்தது.
இச்சம்பவம் காரணமாக எந்தவொரு உயிரிழப்புகளும் ஏற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.