உலகில் குழந்தை பெற்ற முதலாவது ஆண் விவாகரத்து வழக்கு !

உலகில் முதன் முதல் கர்ப்பம் தரித்து பிள்ளை பெற்ற ஆண் என்கிற பெருமைக்கு உரியவர் Thomas Beatie. வயது 38. 2008 ஆம் ஆண்டில் முதல் குழந்தையை பிரசவித்தார்.
உலகில் குழந்தை பெற்ற முதலாவது ஆண் விவாகரத்து வழக்கு !
இவருக்கு மூன்று குழந்தைகள். மனைவி யின் பெயர் Nancy. வயது 49. 09 வருட திருமண வாழ்க்கை யை தொடர்ந்து Nancy இடம் இருந்து விவாகரத்து கோருகின்றார்.

Nancy மது அருந்துகின்ற பழக்கம் உடையவர் என்றும் மது அருந்திய பிற்பாடு வன்முறையாளராக மாறி விடுகின்றார் என்றும் குற்றம் சுமத்து கின்றார். 

குறிப்பாக குழந்தைகள் முன்னிலை யில் வைத்து அடிக்கின்றார் என்றும் கவட்டுக்குள் அடிக்கின்றார் என்றும் கூறுகின்றார்.

இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு வந்து உள்ளது என்கின்றார். அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்து உள்ளார். 

இதில் ஜனவரி மாதம் இடம் பெற்ற சம்பவம் ஒன்றை குறித்து விவரித்து உள்ளார்.

ஒவ்வொரு இரவைப் போல அன்றும் Nancy உள மற்றும் உணர்வு ரீதியாக துன்புறுத்தினார் என்று Beatie விளங்கப் படுத்தி இருக்கின்றார். ஆனால் Nancy இன் குற்றச்சாட்டுக்கள் வேறு விதமாக உள்ளன.
இருவருக்கும் இடையிலான உறவை Beatie துஷ்பிர யோகம் செய்து உள்ளார் என்று நீதிமன்றத் துக்கு எழுத்து மூலம் அறிவித்து உள்ளார். 

ஆயினும் Beatie, குழந்தைகள் ஆகியோரை Nancy சந்திக்க கூடாது என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் தடை பிறப்பித்து உள்ளார்.

Beatie வெளித் தோற்றத்துக்கு ஆணை போல காட்சி அளித்தாலும் பெண்களுக்கு உரிய இனப் பெருக்க உறுப்புகளை பிறப்பில் இருந்து கொண்டிருக் கின்றார். 

இவர் பிறப்பால் ஒரு பெண். 1974 ஆம் ஆண்டு Hawaii இல் பிறந்தவர். 20 வயது வரை பெண்ணாக வாழ்ந்தவர்.

மோடல் அழகியாக கூட பிரபலம் அடைந்து இருந்தார். 20 களில் ஆண்களுக்கு உரிய உடுப்புக்களை அணிய தொடங்கினார். பிடித்துக் கொண்டது. மார்பகங் களை அகற்றிக் கொண்டார்.

ஹோர்மோன் சிகிச்சைகள் பெற்றார். சட்டப் படி ஆணாக பிரகடனப் படுத்திக் கொண்டார். ஆயினும் பிறப்புறுப் புக்களை மாற்றம் செய்ய வில்லை. இவர் 2003 ஆம் ஆண்டு Nancy ஐ சந்தித்தார்.
உலகில் குழந்தை பெற்ற முதலாவது ஆண் விவாகரத்து வழக்கு !
இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். Nancy ஒரு விதவை. ஏற்கனவே இரு குழந்தை களுக்கு தாய். கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை செய்தவர். 

இதனால் Nancy ஆல் மீண்டும் தாய் ஆக முடியாது. ஆனால் குழந்தைகள் என்றால் Beatie இற்கு ரொம்ப பிடிக்கும். 

எனவே சட்டரீதியாக ஆண் என்று பிரகடனப் படுத்தப் பட்டு இருந்தாலும் கூட கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுக்க தீர்மானித்தார் Beatie. 

இவரது உடலுக்குள் செயற்கை முறையில் 2007 ஆம் ஆண்டு விந்தணு உட்செலுத்தப் பட்டது. விந்தணு இன்னொரு வரிடம் இருந்து நன் கொடையாக பெறப்பட்டு இருந்தது. 
இவர் பெண் உறுப்புக்களை மாற்றி இருக்க வில்லை என்பதாலேயே கர்ப்பம் தரித்து குழந்தை பெற முடிந்து உள்ளது. அண்மைய நாட்களில் தான் இவர் இனப் பெருக்க உறுப்புக்களை மாற்றிக் கொண்டார்.

செயற்கை ஆணுறுப்பு இவருக்கு வைத்தியர் களால் பொருத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆயினும் இதை இன்னமும் மனைவிக்கு காண்பிக்காமல் உள்ளார்.
Tags:
Privacy and cookie settings