யுக்ரைனில் மற்றொரு மனித பார்பி !

யுக்ரைனைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் பார்பி பொம்மையின் தோற்றத்தில் காணப்படுகிறார். மற்றொரு மனித பார்பி என அவர் அழைக்கப்படுகிறார்.
யுக்ரைனில் மற்றொரு மனித பார்பி !
லோலிட்டா ரிச்சி எனும் இந்த யுவதி இயற்கையாகவே தனது உடல் பார்பி பொம்மையின் தோற்றத்தில் இருப்பதாக கூறுகிறார்.

ஏற்கெனவே யுக்ரைனைச் சேர்ந்த வலேரியா லக்கியனோவா மற்றும் எலினா கொவலேவ்ஸ்கயா உட்பட சில யுவதிகள் மனித பார்பி என அழைக்கப்படுகின்றனர்.

பார்பி பொம்மை போன்று தோற்றமளிப்பதற்காக அவர்கள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் தமது உடலமைப்பை மாற்றிக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  

28 வயதான வலேரியா லக்கியனோவா இதை மறுத்து வருகிறார். அவரைப் போலவே லோலிட்டா ரிச்சியும் கூறுகிறார். 

தான் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எதுவும் செய்து கொள்ளவில்லை எனவும் தான் வெளியிடும் புகைப்படங்கள் போட்டோஷொப் மூலம் மாற்றம் செய்யப்பட்டவை அல்ல எனவும் லோலிட்டா  தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்பதற்காக அப்படியான சத்திர சிகிச்சைக்குட்படுவது தவறு எனக் கூற முடியாது என்கிறார் லோலிட்டா.
"பெண்ணொருவர் அழகான கண்களை கொண்டிருக்கா விட்டால் அவர் கொன்டாக்ட் லென்ஸ் அணியக்கூடும். 

மூக்கில் ஏதாவது கோளாறு இருந்தால் அதை சீராக்குவதற்காக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையோ வேறு வகையான சிகிச்சையோ செய்யக்கூடும் என லோலிட்டா ரிச்சி தெரிவித்துள்ளார்.

16 வயதான லோலிட்டா ரிச்சி யுக்ரைனின் தலைநகர் கீவ்வை சேர்ந்தவர். தற்போது தற்காலிகமாக துர்க்மேனிஸ்தானில் வசிக்கிறார்.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் பார்பி பொம்மை போன்ற உடலை கட்டுக்கோப்பாக பேணுவது மாத்திரம் ஒருவருக்கு போதுமானதல்ல என அவர் கூறுகிறார். 

உணவு, பானம் எதுவும் உட்கொள்ளாமல் உயிர்வாழும் சித்தாந்தத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்கிறார் அவர். எனக்கு எனது தாயார் மிகவும் ஆதரவளிக்கிறார். 

நான் விரும்பிய வாழ்க்கை முறையை தொடர்வதற்கு அவர் அனுமதிப்பதுடன் எனது புகைப்படக் கலைஞராகவும் அவர் செயற்படுகிறார் என லோலிட்டா கூறுகிறார்.
பிள்ளைப் பருவத்தில் தான் தனது தோற்றம் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை எனவும் ஏனைய சிறுமிகளைப் போல் பொம்மைகளுடன் விளையாடுவதில் தான் ஆர்வம் காட்டவில்லை எனவும் லோலிட்டா கூறுகிறார்.

நான் ஒருபோதும் பொம்மைகளை விளையாடுவது குறித்து சிந்திக்கவில்லை. நான் எப்போதும் சிறுவர்களுடன் வெளியில் சென்றே விளையாடுவேன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர்தான் நான் இந்த தோற்றத்துக்கு மாறினேன். அழகாக தோற்றமளிக்க வேண்டும் என நான் எண்ணியதால் இவ்வாறு ஆடையணிகிறேன்.

எனது பெரிய மார்பகங்கள் இயற்கையானவை. பொருத்தமான கொன்டாக்ட் லென்ஸ் மற்றும் மேக் அணிகிறேன். எனது தாயார் ஒரு நடிகையாக விளங்கியவர்.

அவர் பயன்படுத்திய விக்குகளை நான் பயன்படுத்துவதுண்டு. எனது உடற்தோற்றம் குறித்து நான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளேன். 

இது போன்ற தோற்றத்தை பெறுவதற்கு விரும்பும் பெண்கள் பலர் உள்ளனர்" என அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் தனது தோற்றத்தைப் பற்றி இணையத்தளம் மூலம் மோசமாக விமர்சிப்பதாகவும் லோலிட்டா கூறுகிறார். 

என்னைப் பற்றி மோசமாக விமர்சித்த சிலரை எனது சமூக இணையப் பக்கங்களிலிருந்து நான் நீக்கியுள்ளேன்.

ஆனால் என்னைப் பாராட்டி கருத்துக் கூறுவோரும் உள்ளனர். எனது கைகளை பற்றி ஆண்கள் பாராட்டுவது எனக்குப் பிடிக்கும் என்கிறார் லோலிட்டா ரிச்சி.
Tags:
Privacy and cookie settings