விண்டோஸ் 10 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாறியவர்கள் பட்ட பாடு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
 விண்டோஸ் 10 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
பயனாளிகளை அந்தளவு வேதனைக்கு உள்ளாக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளம் இந்த வாரம் வெளியாகின்றது.

இப்போதைக்கு இருக்கும் விண்டோஸ் 7 போதும் என்கின்றவர்களும் விண்டோஸ் 10 ட்ரை செய்யலாமானு யோசிப்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.. ஆண்ட்ராய்டு காரங்களுக்கு ஆபத்து..!

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் மொக்கை வாங்கிய அம்சங்களை அகற்றி விட்டு அனைத்து பயனாளிகளுக்கும் 

பயன் தரும் விதமாக புதிய விண்டோஸ் 10 இயங்குதளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,

அதன் உண்மை நிலையை அறிந்து கொண்டு பதிவிறக்கம் செய்யலாமா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..
 விண்டோஸ் 10 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
ஸ்டார்ட் மெனு 

பழைய விண்டோஸ் இயங்குதளங்களில் இருப்பதை போன்ற ஸ்டார்ட் மெனு விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 7 

விண்டோஸ் இயங்குதளத்தின் ஸ்டார்ட் மெனு பட்டன் கடைசியாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் வழங்கப்பட்டது.

விண்டோஸ் 8 

விண்டோஸ் இயங்குதளங்களில் பிரபமலாக இருந்த ஸ்டார்ட் மெனு பட்டன் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 விண்டோஸ் 10 பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
இலவசம் 

விண்டோஸ் 7 அல்லது அதற்கும் மேற்பட்ட இயங்குதளங்களை பயன்படுத்துவோர் விண்டோஸ் 10 இயங்குதளத்தை ஓர் ஆண்டு முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும்.

தோல்வி 

ஸ்டார்ட் மெனு இல்லாததால் விண்டோஸ் 8 இயங்குதளம் தோல்வியை தழுவியதோடு பெரும் விமர்சனங்களையும் சந்தித்தது.

கார்டனா 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'உதவி ஆள்' என்றழைக்கப்படும் கார்டனா விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 

போன் சிரி போன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் முதன் முதலில் விண்டோஸ் போன்களில் வழங்கப்பட்டது.

கேள்வி 

கார்டனா உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதோடு பல விதங்களில் உங்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

அப்டேட் 

சீரான அப்டேட்களை இலவச அவ்வப்போது பெற முடியும். விண்டோஸ் 10 பிடிக்காதவர்கள் மீண்டும் பழைய விண்டோஸ் இயங்கு தளத்திற்கு செல்ல முடியும்.
Tags:
Privacy and cookie settings