ஒரு மகள் இருப்பது 10 மகன்களுக்கு சமம்.. நடிகர் அமிதாப் !

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஐக்கிய நாடுகளின் சபையில் பெண் குழந்தைகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். இதன்மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
  abi
உலக மகள்கள் தின வாரத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் இருப்பது பெருமையான விஷயம். மகள்களை நாம் மகன் போல ‘வாடா… போடா…’ என்று கூப்பிடுகிறோம். அதே நேரம், மகன்களை மகள்கள் போல அழைப்பது இல்லை.

இதுதான் மகள்களுக்கு இருக்கிற முக்கியத்துவம். பெற்றோருக்கு மகள்கள் பதற்றத்தை ஏற்படுத்த மாட்டார்கள். இன்றைய உலகில் ஒரு மகள் இருப்பது 10 மகன்களுக்கு சமம்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார். 

இவருக்கு சுவேதா என்ற மகளும் இருக்கிறார். மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை மணந்துள்ளார். நவ்யா நவேலி, ஆரத்யா என 2 பேத்திகளும் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings