நீடாமங்கலத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் செல்போன் திருட்டு!

நீடாமங்கலத்தில் கடை யின் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம், செல் போனை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீ சார் வலைவீசி தேடி வரு கிறார்கள்.
செல்போன் கடையில் திருட்டு

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் அருகே உள்ள நார்த் தாங்குடி கிராமத்தை சேர்ந் தவர் பிரகதீஸ்வரன் (வயது27). இவர் நீடாமங்கலம் மேல ராஜவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நீடா மங்கலம் போலீஸ் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி னர். விசாரணையில் கடை யின் பூட்டை உடைத்து செல் போன் மற்றும் ரூபாய் 16 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த சந்தேகத்துக்கு இடமான கைரேகைகளை சேகரித்து கொண்டனர்.

மோப்ப நாய் வரவழைக்கப் பட்டு துப்பு துலக்கும் பணி நடைபெற்றது. விசாரணை யின்போது போலீசார் கடை யில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த னர்.

இதில் கை குட்டையால் முகத்தை மூடி இருந்த மர்ம ஆசாமி ஒருவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து, பணம் மற்றும் செல்போனை திருடி யது தெரியவந்தது. இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings