துபாயிடமிருந்து முதலீட்டை எதிர்பார்க்கிறேன்.. மோடி !

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகளை பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்க்கிறார். இதுகுறித்து அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் புள்ளிகளிடம் வெளிப்படையாகவே பேசியும் உள்ளார்.
முதலீட்டாளர்களுடன் நடந்த சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் மோடி. மஸ்தார் நகர் சென்றபோது அங்கு முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசினார் மோடி.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 


முதலீட்டாளர்கள் சந்திப்பு 

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசியபோது எமிரேட்ஸிலிருந்து 1 லட்சம் கோடி முதலீடுகளை தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

விவசாயத்தில் முக்கியத்துவம் 

அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், வேர்ஹவுஸிங் ஆகிய துறைகளில் பெருமளவிலான முதலீடுகளை தான் எதிர்நோக்கியிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

பெரும்பான்மை அரசு இருக்கிறது 

இந்தியாவில் தற்போது பெரும்பான்மையுடன் கூடிய மத்திய அரசு செயல்பாட்டில் இருப்பதாகவும், இன்சூரன்ஸ், ரயில்வே, பாதுகாப்பு உற்பத்தி உள்ளிட்டவற்றில் தற்போது பெருமளவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சூரிய சக்தி மின்சாரம் 

சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் முதலீடுகள் குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசியுள்ளார். குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் குறித்தும் அதில் முதலீடுகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார் என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறைந்த விலை வீடு கட்டும் திட்டம் 

கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் வந்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மோடி மேலும் பேசுகையில், வீட்டு வசதியைப் பொறுத்தவரை தொழில்நுட்பம், வேகம், தரமான கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா விரும்புகிறது. மேலும் குறைந்த விலையில் வீடு கட்டுவது என்பது முக்கியமானது என்றார் அவர்.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் 

அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் 800 பில்லியன் டாலர் முதலீடுகளை மோடி எதிர்பார்க்கிறாராம். தற்போது அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகளின் அளவு 3 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலேயே உள்ளது. இவை மட்டுமே நேரடி முதலீடாகும். மற்றவை பங்குச் சந்தையிலான முதலீடுகள்தான்.
எடிசலாட், எமார் 

எடிசலாட் மற்றும் எமார் ஆகிய முக்கிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் இந்தியாவில் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததால் முதலீடுகளை நிறுத்தி விட்டன.

60 பில்லியன் டாலர் 

70களில் இந்தியா - எமிரேட்ஸ் இடையிலான வர்த்தக அளவானது 180 மில்லியன் டாலராக இருந்தது. தற்போது இது 60 பில்லியன் டாலர் அளவிலேயே உள்ளது.

34 ஆண்டு இழப்பை சரிக்கட்ட வேண்டும் 

கடந்த 34 ஆண்டுகளிலும் இரு நாடுகளும் பல்வேறு முக்கியத் தருணங்களை, முதலீடுகளை நழுவ விட்டு விட்டன. அதை நாம் நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் மோடி கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings