மீனவர்கள் வலையில் சிக்கிய 200 கிலோ மீன்!

1 minute read
தூத்துக்குடி விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய மருத்துவ குணமுடைய 200 கிலோ எடை கொண்ட சுறா மீன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தால் மீனவர்கள் மகிழ்சியடைந்தனர்.
 
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை நூற்று க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவி ல் கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு பெரிய அளவில் மீன்கள் கிடைக்க வில்லை.

இருந்த போதிலும் தூத்துக்குடியைச் சேர்ந்த நிக்கோலஸ்பாபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வலைவீசிய மீனவர்கள் வலையில் ஏறத்தாழ 200 கிலோ எடையில் மருத்துவ குணம் கொண்ட சுறாமீன் சிக்கியது.

7 அடி நீளம் கொண்ட அந்த மீனை புதன்கிழமை இரவு மீன்பிடி துறைமுத்தில் மீன் வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் கேட்டனர்.

இறுதியில் அந்த சுறா மீன் 38 ஆயிரம் ரூபாய் விலைக்கு ஏலம் போனது. இத னால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதுபோன்ற ராட்சத சுறா மீன்கள் எப்போதாவதுதான் வலையில் சிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
Tags:
Today | 22, March 2025
Privacy and cookie settings