காரில் மதுபானம் கடத்திய 2 பேர் கைது!

0 minute read
நீடாமங்கலத்தில் காரில் மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
காரில் மதுபானம் கடத்தல் 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நேற்று முன் தினம் இரவு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். 

சோதனையின்போது காரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 2 பேரும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது33), ஜெகதீசன்(27) ஆகியோர் என்பதும், மதுபான பாட்டில்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது. 

 2 பேர் கைது

இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ஜெகதீசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மதுபானம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings