இதுவரை முகேஷ் அம்பானி வீட்டையும், சச்சின் டெண்டுல்கர் வீட்டையும் பார்த்து மெய் சிலிர்த்து வந்த மும்பை மக்கள் இனி ரோஹித் சர்மா வீட்டையும் பார்த்து ஆச்சரியப்படப் போகிறார்கள்.
இருப்பினும் முகேஷ் அம்பானி கட்டி வைத்துள்ள பிரமாண்ட வீட்டுடன் இதை சற்றும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் மும்பையில் காஸ்ட்லி வீடு வைத்துள்ளோர் பட்டியலில் ரோஹித்தும் இணைந்திருக்கிறார்.
காதல் பரிசு... ரோஹித் தனது காதலி ரிகிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். எனவே, தனது காதல் மனைவிக்கு திருமணப் பரிசாக தருவதற்காக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள அகுஜா டவரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கியுள்ளார் இவர்.
ஒர்லியில் இருந்து காரில் பாந்திராவுக்கு, கடல்மேல் அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம்.
காரணம் இருக்கிறது. ரூ. 30 கோடியில் ஒரு பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கியுள்ளார் ரோஹித் சர்மா.
இருப்பினும் முகேஷ் அம்பானி கட்டி வைத்துள்ள பிரமாண்ட வீட்டுடன் இதை சற்றும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் மும்பையில் காஸ்ட்லி வீடு வைத்துள்ளோர் பட்டியலில் ரோஹித்தும் இணைந்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் ரோஹித் சர்மா, மும்பையில் ரூ. 30 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்பில் நான்கு அறைகளைக் கொண்ட வீடு வாங்கியுள்ளார்.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்தவர் ரோஹித் சர்மா. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் களில் ஒருவராக திகழும் இவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
53 அடுக்குகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 29வது மாடியில் 4 படுக்கை அறைகள் கொண்ட வீட்டை அவர் வாங்கியுள்ளார்.
ஒர்லியில் இருந்து காரில் பாந்திராவுக்கு, கடல்மேல் அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு 20 நிமிடத்தில் சென்று விடலாம்.
அதுபோல் வான்கடே மைதானத்துக்கும் 20 நிமிடத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் இதுவும் ரோஹித்துக்கு வசதியாக இருக்கும்.