கள்ளத் தொடர்பாளர்களின் வெப்சைட்டுக்குள் ஊடுருவிய ஹேக்கர்ஸ் !

நவீன மயமாகி விட்ட இப்போதைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் அடிக்கடிச் சிக்கிக் கொண்டு விழி பிதுங்கி விடுகிறது.கொண்டு இருக்கிறது.
கள்ளத் தொடர்பாளர்களின் வெப்சைட்டுக்குள் ஊடுருவிய ஹேக்கர்ஸ் !
இந்த ஹேக்கர்ஸ்கள் நமது தகவல்களை திருடுவதோடு மட்டுமல்லாமல், முழுமையாக அழித்து முடக்கும் முயற்சிகளில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இதற்காக இந்த வலைத்தள திருடர் கள் பயன்படுத்தும் வழிகளாக மின்னஞ்சல், போலியாக உருவாக்கப்பட்ட பதிவிகள், 

உரலிகள் மற்றும் இரகசிய குறியீடு திருடும் மென் பொருள்கள் போன்றவைகள் இருக்கிறது.

இவற்றில் மிகப் பிரதானமாக அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மின்னஞ்சல் களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள்.

இப்படியான சைபர் கிரிமினல்கள் எனப்படும் ஹேக்கர்ஸ்கள் அண்மையில் கள்ளத் தொடர்பு இணைய தளத்துக்குள் ஊடுருவி கிட்டத்தட்ட 3.7 கோடி ஜோடிகளின் ஃபுல் விவரங்களை 

ஸ்வாஹா செய்து அதை பப்ளிக் பண்ணாமலிருக்க வேண்டுமானால் பெருந்தொகை வேண்டுமென கேட்டு மிரட்டி வருகிறதாம்.
நாம் காலம் காலமாக பின் வற்றி வந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரை முறையை மீறி ‘யாரோடும், யாரும்’ என்ற மேற்கத்திய கலாசாரத்தை 

இன்றைய தலைமுறையினர் பின்பற்றி வருவதால் இவர்களது சபலங்களை வைத்து பணம் சம்பாதிக்க பல இணைய தளங்கள் முயன்று வருகின்றன.

அவ்வகையில், திருமணமான ஆணும், பெண்ணும் தங்களது துணைவர்களை ஏமாற்றிவிட்டு, புது நபர்களுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள 

துணை புரியும் இணைய தளங்களில் கனடா நாட்டைச் சேர்ந்த ‘ஆஷ்லே மேடிஸன்’ என்ற நிறுவனம் இந்த ‘தொழிலில்’ மிகவும் பிரபலமான நிறுவனமாக உள்ளது.

‘வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் – அந்த வாழ்க்கையிலே, வாலிபம் கொஞ் சம் நேரம் தான்’ (Life is short. Have an affair) என்ற கொள்கை முழக்கத்துடன் 

கள்ளக் காதலர்களுக்கு தரகு வேலை பார்த்து வரும் இந்த இணைய தளத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்து மூன்று கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர்.
உள்ளூரில் கணவன் இல்லாத போது, உள்ளூர் வாசியுடன்.., வெளிநாட்டு பய ணத்தின் போது மனைவி உடன் வராத போது 

அந்த நாட்டை சேர்ந்த புத்தம்புது சிட்டுடன் என அனைத்து வகையான ‘சேவைக்கும்’ இந்த இணையதளம் வழியமைத்து தருவதால் தமது கள்ளத் தொடர்புகள் எல்லாம் ரகசியமாகவே நடந்து வருவதாக இந்த அங்கத்தினர் கருதி வந்தனர்.

இதற்கென மாத, ஆண்டு சந்தாவும் வசூலித்து வந்த ‘ஆஷ்லே மேடிஸன்’, உயிரே போனாலும் உங்கள் ரகசிய தொடர்புகள் யாருக்கும் தெரியாது என்று வாக்குறுதி அளித்திருந்தது.
கள்ளத் தொடர்பாளர்களின் வெப்சைட்டுக்குள் ஊடுருவிய ஹேக்கர்ஸ் !
இந்நிலையில், இந்த இணைய தளத்துக்குள் ஊடுருவிய சில ‘ஹேக்கர்ஸ்’ (இணையதள பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல் திரட்டை கண்காணித்து,

திருடும் கும்பல்) மேற்கண்ட மூன்று கோடியே 70 லட்சம் வாடிக்கையா ளர்களின் பெயர் விபரம், அவர்களில் யார், யார், எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தனர்?,

இதற்கான பணப் பரிவர்த்தனை ஆன்லைன் மூலம் எப்படி நடைபெற்றது? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ‘ஸ்வாஹா’ செய்து விட்டது. 

இந்த தகவல்களை வைத்து அந்த கும்பல் ‘ஆஷ்லே மேடிஸன்’ நிர்வாகத்தை மிரட்டி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ஒரு பெரிய தொகையை கேட்டு அவர்கள் மிரட்டி வருவதாகவும், இல்லை என்றால் ‘ஆஷ்லே மேடிஸன்’ வாடிக்கையாளர்களைப் பற்றிய 

புள்ளி விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைக்கப் போவதாகவும் ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தி வெளியானதும் ‘ஆஷ்லே மேடிஸன்’ அங்கத்தினரான ஆண், பெண் வாடிக்கையாளர்களுக்கு இப்போதே வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி விட்டது.

தப்பித் தவறி இந்த தகவல்களை அவர்கள் வெளியிட்டு விட்டால் அமெரிக்கா, கனடா நாட்டில் மட்டும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள

இந்த நிறுவனத்தின் மெத்தனத்தால் இந்நாடுகளில் வாழும் பல ஆண், பெண்கள் தங்கள் கணவன் அல்லது மனைவிகளால் பெரும் சர்ச்சை ஏற்படும் என்பது நிச்சயம்
Tags:
Privacy and cookie settings