வலங்கைமானை அடுத்த விருப்பாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் தினேஷ் (வயது 25). இவர் கோயம்புத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
விடு முறையில் ஊருக்கு வந்து இருந்த தினேஷ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோஷ்டி மோதலின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வலங்கைமான் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயராஜ் (26),
சவுரிராஜன் மகன்கள் முத்தையன், ஜெய்வீர், குருமூர்த்தி மகன் கார்த்திக், கோவிந்தராஜ் மகன் ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி மகன் அருண்குமார், ராமலிங்கம் மகன் அரவிந்த் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஜெயராஜ், முத்தையன் ஆகியோர் கோஷ்டி மோதலில் படுகாயத்துடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய கார்த்திக், அருண்குமார், ஜெய்வீர், ராஜசேகர் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.