பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி ஜெயலலிதா!

நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியும், மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையும்கட்சி நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும்,

தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்து, தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி,

தனக்கும், தனது குடும்பத்திற்கும் மறு வாழ்வு தருகின்ற வள்ளலாக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.

பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாகக் கண்ணுற்ற, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,

முதலமைச்சர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’ல் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.
 
மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’ ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings