தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கன்னியாகுமரி 2 வாலிபர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜஸ்டின் சுதாகர், ராஜ்குமார். இவர்கள் இன்று மதியம் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, ஒழுகினச்சேரியில் நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டின் அருகே இருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத் வேண்டும், சசிபெருமாள் குடும்பத்துககு 25 லட்சம் நிதியுதவி கொடுக்க வேணடும். சசிபெருமாள் சாவிற்கு நீதிபதியை கொண்டு நீதிவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள், பார்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் எலைட் மதுபான கடையை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அரசு உடனாய அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை செல்போன் டவரின் மேலிருந்து அவர்கள் வலியுறுத்தினர்.