சமூக வலைதள குற்றங்களை சித்தரிக்கும் ‘ஜிகினா” !

தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. அவரது நிறுவனம் வெளி யிட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலி சோடா’, ‘மஞ்சபை’, ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்கள் பெரும் வெற்றி அடைந்தன.
 
அதை தொடர்ந்து திருப்பதி பிக்சர்ஸ் அடுத்து வெளியிடும் ‘ ஜிகினா’ வரும் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறுகையில், “ஜிகினா’ இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும்.

பெருகி வரும் சமூக வலைதள குற்றங்களைப் பற்றியும்,அறிமுகம் இல்லா காதல் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும், இன்றைய இளைஞர்களின் மனநிலை பற்றியும் தெள்ளத் தெளிவாக, மிகவும் ஜனரஞ்சகமாக பட மெடுத்துக் காட்டி இருக்கிறார் எனது நண்பரும் இயக்குனருமான ரவி நந்தா பெரியசாமி.

“எனது நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி அதிர்ஷ்டத் தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும், அதை சரி வர இயக்கும் இயக்கு னர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது.

“ஜிகினா’ படத்தில் நாயகனாக நடிப்பவர் விஜய் வசந்த். அவர் இந்த பாத்தி ரத்துக்கு பொருந்தக்கூடிய அளவுக்கு வேறு யாரேனும் பொருந்தி இருப்பா ர்களா என்பது சந்தேகமே.

அவரது ஜோடியாக அறிமுகம் ஆகிறார் சானியா தாரா. “சிங்கம் புலி, ரவி மரி யா, ‘கும்கி’ அஷ்வின் , ‘டாடி’ செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
 
“புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஷ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் உருவான ‘ ஜிகினா’ பெரும் எதிர்பா ர்ப்புக்கு இடையே, வரும் 21ஆம் தேதி வெளி வர உள்ளது. இளைய தலை முறையினருக்கு இது படமாக மட்டும் அல்ல, பாடமாகவும்அமையும்” என்றார் இயக்குனர் லிங்குசாமி.
Tags:
Privacy and cookie settings