சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் கொடுத்தனுப்பிய கடிதம் மற்றும் பூங்கொத்தை வாங்காமல் விமானம் ஏறி டெல்லிக்கு பறந்து விட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சென்னை வந்த நரேந்திர மோடி, போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வலிய சென்றார். டீ குடித்தார்.
ரஜினியோடு சேர்ந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ரஜினியின் ஆதரவு தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டார். எனினும், மோடியின் ஸ்டண்ட் எடுபடவில்லை.
மதவெறி நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் கன்னியாகுமரி தொ குதி, சாதிவெறி தலை விரித்தாடும் தர்மபுரி தொகுதி ஆகியவை நீங்கலாக தமிழகத்தில் உள்ள ஏனைய 37 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்தது.
பின்னர், ரஜினியை பா.ஜ.க. சார்பு அரசியலுக்கு இழுக்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், மாநிலத் தலைவர் ‘சமஸ்கிருத’ இசை சௌந்தர்ராஜனும் பல வழிகளில் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தார்கள்.
ஆனால், கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாக இருந்த ரஜினி, அவர்கள் விரித்த வலையில் சிக்காததால், ‘ச்சீ… ச்சீ… இந்த பழம் புளிக்கும்’ என்று ஏமாற்ற த்துடன் விட்டுவிட்டார்கள். இந்நிலையில் ஒருநாள் பயணமாக கடந்த வெள் ளியன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, போயஸ் தோட்டத்துக்குச் சென்றார்.
அங்குள்ள ரஜினி வீட்டுக்குப் போகாமல், முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டு க்குப் போனார். அங்கே மதிய விருந்து உண்டுவிட்டு அப்படியே கிளம்பி விட்டார். இவ்வளவு தூரம் வரும் மோடி தங்கள் வீட்டுக்கும் வருவார் என்று ரஜினியும், அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் மோடி வராமல் கிளம்பிப் போய்விட்டதால், தன்னைச் சந்திக்க ரஜினி வராததால் மோடி கோபத்தில் இருக்கிறாரோ என நினைத்த ரஜினியின் குடும் பத்தினர், ரஜினி சார்பில் ஒரு கடிதமும், பூங்கொத்தும் கொடுத்து, உதவியா ளரை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அனுப்பினார்கள்.
“நான் வெளியூரில் இருப்பதால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. நான் உங்களைச் சந்திக்க விருப்பமாக உள்ளேன்’ என்று அக்கடிதத்தில் ரஜினி எழுதியிருந்தார்.
ரஜினியின் கடிதமும் பூங்கொத்தும் கொண்டு வரப்படும் தகவல், விமான நிலையத்தில் இருந்த மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதை ஒருபொருட்டாக மதிக்காத மோடி, உடனே விமானம் ஏறி டெல்லிக்கு பறந்துவிட்டார். “ரஜினிகாந்த் சார்பில் ஒரு கடிதமும், பூங் கொத்தும் கொண்டு வரப்பட்டது.
மோடி விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு தாமதமாக அவை கொண்டு வரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியவில்லை” என்று இப்போது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
ஆனால், அதை ஒருபொருட்டாக மதிக்காத மோடி, உடனே விமானம் ஏறி டெல்லிக்கு பறந்துவிட்டார். “ரஜினிகாந்த் சார்பில் ஒரு கடிதமும், பூங் கொத்தும் கொண்டு வரப்பட்டது.
மோடி விமான நிலையத்துக்குள் சென்ற பிறகு தாமதமாக அவை கொண்டு வரப்பட்டதால் மோடியிடம் சேர்க்க முடியவில்லை” என்று இப்போது சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் பாஜக நிர்வாகிகள்.