கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் நான்கு !

மதர் போர்டு வாங்கும் போதே அதற்கு ஏற்ற ப்ரோசெசரை நாம் தேர்ந்தெடுத்து விட வேண்டும் . ப்ரோசெசர்கள் படி படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது core 2 quad என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன .
 கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் நான்கு!
ப்ரோசெசர்களில் ஒரு சிலவற்றை மட்டும் தற்போது தெரிந்து கொண்டால் போதும். பெண்டியம் 4 - வழக்கத்தில் இல்லை

(வேண்டுமானால் விண்டோஸ் 98,2000 இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ) dual core - ஒரு சில இடங்களில் மட்டும் (விலை குறைவாக செல்பவர்களுக்கு ) ஒபெரடிங் சிஸ்டம் xp க்கு போதுமானது 

core 2 duo - பொதுவாக வாங்கப்படுவது ஒபெரடிங் சிஸ்டம் விண்டோஸ் 7 க்கு தேவை core 2 quad - சற்றே விலை கூடுதலானது ..

high end என சொல்லலாம் விண்டோஸ் 7 மற்றும் சர்வர் களில் பயன்படும் . Xeon - ப்ரோசெசர் கள் சர்வர் களில் பயன்படும் mobile - ப்ரோசெசர்கள் லேப்டாப் களில் காணப்படும் ..
இதை தவிர AMD ப்ரோசெசர் களும் உபயோகப் படுத்தப் படுகின்றன . கணிணி பாகத்தில் வெகு எளிதாக வெப்பமடையக் கூடிய பொருளாகும் . 

ஆகவே தான் இதன் மேலே heat sink and cooler fan பொருத்துகிறோம் . 2MB, 3MB cache எது வேணும் உங்களுக்கு கேட்டா குழம்பாதீங்க ... 

அது ப்ரோசெசர் மெமரி தான் . மெயின் மெமரி (ராம்) அதிகமாக பயன் படுத்தும் டேட்டா வை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் திறன் தான் L1 மெமரி எனப் படுகிறது.
L2 மெமரி என்பது மதர் போர்டு இல் சால்டர் செய்யப்பட்டு , அல்லது ஸ்லாட் -இல் வரக் கூடியாது. நாம் வாங்கி அசெம்பிள் செய்யப் போகும் ப்ரோசெசர் இன்டெல் core 2 duo E7500 / 2.93 GHz இதன் விலை - 5,650 rs.
Tags:
Privacy and cookie settings