இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதி !

இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மணக் கோலத்தில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற புதுமணத் தம்பதிகள் வருகை தந்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதி !
இலங்கை நாடாளு மன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 

வாக்குச் சாவடிகளில் வரிசையாக நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இலங்கையில் சீகரிய கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை மணக் கோலத்தில் ஒரு தம்பதியர் வந்து வாக்களித்தனர். 

இவர்கள் திருமணம் முடிந்த கையோடு ஓட்டுபோட வந்துள்ளனர். மணமகள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் ஆவார். 

இவரும் மணமகனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். வாக்களிக்க வந்த மணமக்களு க்கு அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாழ்த்துக் களை தெரிவித்து கொண்டனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 225 ஆகும். இதில் 196 பேர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 
மீதமுள்ள 29 எம்.பி.க்கள் கட்சிகள் பெற்ற வாக்குகள் விகித அடிப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள்.

அறுதி பெரும்பான்மை க்கு 113 எம்.பி.க்கள் தேவை. தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்ப டுபவர் அதிபருக்கு அடுத்து அதிகாரம் கொண்டவராக திகழ்வார்.
Tags:
Privacy and cookie settings