ஸ்மார்ட் போன்களின் அளவுக்கு ஸ்மார்ட் வாட்ச்களும் இப்போது பிரபலமாகி வருகின்றன. கைகளில் அணிந்து கொள்ளும் வாட்சிலேயே ஆன்ட்ராய்டு ஓ.எஸ். உடன் வாய்ஸ் காலிங், மியூசிக் பிளேயர், இண்டர்நெட் என சகல வசதிகளையும் 2 இன்ச் ஸ்கிரீனில் வந்து விடுகிறது.
எதிர் காலத்தில் அனைவரது கை மணிக் கட்டுகளிலும் ஸ்மார்ட்வாட்சுகள் தவழும் என்று
நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் ஸ்டிக்கரை கைகளில் ஒட்டி அதன் மூலம் போன் செய்யவும்,
பாடல்களை கேட்கவும் முடியும் என நிரூபித்திருக் கிறார்கள் விஞ்ஞானிகள்.
நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வெறும் ஸ்டிக்கரை கைகளில் ஒட்டி அதன் மூலம் போன் செய்யவும்,
பாடல்களை கேட்கவும் முடியும் என நிரூபித்திருக் கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஜெர்மனியின் சார்லாண்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியா ளர்களும், அமெரிக்காவின் மெலன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியா ளர்களும் குழுவாக இணைந்து ‘ஐ ஸ்கின்’ எனும் ஸ்டிக்கரை உருவாக்கியி ருக்கிறார்கள்.
இந்த ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிக் கொண்டால் நம் மொபைல் போனில் கால் செய்யவும், மியூசிக் பிளேயரில் பாடல்களை கேட்கவும் விரல்களால் இந்த ஸ்டிக்கரை தொட்டே இயக்கலாம்.
இந்த ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிக் கொண்டால் நம் மொபைல் போனில் கால் செய்யவும், மியூசிக் பிளேயரில் பாடல்களை கேட்கவும் விரல்களால் இந்த ஸ்டிக்கரை தொட்டே இயக்கலாம்.
‘டச் ஸ்டிக்கர்’ எப்படி வேலை செய்கிறது?
சிலிக்கானால் உருவாக்கப்பட்ட இந்த ‘டச்’ ஸ்டிக்கரில் மற்ற சாதாரண டச் ஸ்கீரீன்களை போலவே கெப்பாசிட்டிவ் (capacitive) மற்றும் ரெசிஸ்டிவ் (resistive) சென்சார்கள் உள்ளன.
இந்த ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிக் கொள்வதற்கு மருத்துவத் துறையால் பரிந்துரைக் கப்பட்ட தோலுக்கு கெடுதல் விளைவிக்காத பிசின் இருக்கிறது. நம் வசதிக்கேற்ற வாறு எந்த வடிவத்திலும், எந்த அளவுகளிலும் இந்த ஸ்டிக்கரை தயாரிக்க முடியும்.
தேவைப்படும் போது கைகளில் ஒட்டிக் கொண்டும் தேவை யில்லாத போது தோலில் ஒட்டியதை மீண்டும் எடுத்துக் கொள்ளவும் முடியும். உடலில் எந்த இடத்திலும் இதை ஒட்டிக்கொள்ளலாம்.
‘ஐ-ஸ்கின்’ எனும் நவீன தொழில்நுட்பத்தில் இந்த ஸ்டிக்கர் வேலை செய்கிறது. ஆரம்ப நிலையில் இருக்கும் இந்த நவீன கண்டுபிடிப்பு
இப்போதைக்கு கம்ப்யூட்டர்கள் மற்றும் மொபைல் கருவிகளில் வயர்கள் இணைக்கப்பட்டு இதற்கென பிரத்யேகமாக உள்ள கிராபிக்ஸ் புரோகிராம் மூலம் சென்சார் பேட்ச்கள் வழியாக இயங்குகிறது.
விரைவில், இன்-பில்ட்டாக ஸ்டிக்கரிலேயே மைக்ரோ சிப்புகளை பொருத்தி எந்த வித வயர்களும் இல்லாமல்
இந்த ஸ்டிக்கரை இயங்க வைக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
இந்த ஸ்டிக்கரை இயங்க வைக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
என்னென்ன செய்யலாம்?
எளிதாக வளையும் இந்த ஸ்டிக்கரால் மொபைல் போன்களில் ஸ்டீரீயோ புளூடூத் கருவிகளை கனெக்ட் செய்வதை போல கைகளில் ஒட்டிக் கொண்ட பிறகு கனெக்ட் செய்து போன் கால்கள், மியூசிக் பிளேயர் போன்றவற்றை கன்டரோல் செய்யலாம்.
உதாரணமாக, வால்யூமை குறைப்பது, பாடல்களை டியூன் செய்வது, போன் நம்பர்களை டயல் செய்து கால் செய்வது உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.
கீபோர்டு ஸ்டிக்கர்களின் வழியாக எழுத்துக்களை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.
கீபோர்டு ஸ்டிக்கர்களின் வழியாக எழுத்துக்களை டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.
எப்போது விற்பனைக்கு வரும்?
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. வயர்களால் இணைக்கப்பட்டு பயன்படுத்தும் இந்த ஸ்டிக்கரை வயர்லெஸ்-ஆக கொண்டு வருவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
வீடியோவை பாருங்கள்! - வீடியோ
எனினும், ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்டிக்கரை தென் கொரியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள (Computer-Human Interaction (SIGCHI) conference) சிக்சி மாநாட்டில் பிராஜெட்டாக சமர்பிக்கிறார்கள்.