ரஜினி படத்தின் தலைப்பு கபாலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 minute read
ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகி விட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், முதலில் இப்படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைக்கப் போவதாக கூறப்பட்டது. பின்னர், ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பு தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த இரண்டு தலைப்பையும் புறக்கணித்து விட்டு ‘கபாலி’ என்று தலைப்பு வைக்கப் போவதாக கூறப்பட்டது.

கடைசியில், இந்த தலைப்பையே ரஜினியின் புதிய படத்திற்கு வைக்க படக் குழுவினர் முடிவு செய்திருக்கி றார்கள்.

இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிபடுத்தி யுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் இந்த தலைப்பை வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி யுள்ளார்.

எனவே, ரஜினி படம் ‘கபாலி’ என்ற தலைப்புடன் உருவாக வுள்ளது. இப் படத்தில் ரஜினி பிரபல தாதாவாக நடிக்கிறார்.
 
இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும், தன்ஷிகா, கலையரசன், தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தி ரத்தில் நடிக்கி ன்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Tags:
Today | 13, November 2025
Privacy and cookie settings