ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டவேண்டும்: பா.ஜ.க. எம்.பி !

0 minute read
டெல்லியில் உள்ள ஒளரங்சீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி மகேஷ் கிரி வலியுறுத்தி உள்ளார்.


இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது "மறைந்த மக்களின் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானியாகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் ,

இளைஞர்களின் எழுச்சிமிகு நாயகனாகவும், சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

தனது வாழ்க்கை முழுவதும் தாய் நாட்டிற்கே அர்ப்பணித்தார். எனவே, அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings