‘பேராண்மை’, ‘அரவான்’, ‘பரதேசி’, ‘யா யா’, ‘திறந்திடு சீசே’ போன்ற படங் களில் சிறப்பாக நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை தன்ஷிகா.
‘விழித்திரு’, ‘கிட்ணா’, ‘காத்தாடி’ உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவருக்கு கூடுதலாக தற்போது ரஜினிகாந்தின் மகளாக நடிக் கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது,
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் ரஜினியை வைத்து ‘கபாலி’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். கபாலீஸ்வரன் என்ற வயோதிக தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
கதைப்படி, தாதா கபாலி (ரஜினி) மகள் மது அருந்தும் பழக்கத்தில் மூழ்கிப் போய், குடியடிமையாக இருக்கிறார். இக்கதாபாத் திரத்தில் நடிக்க தன்ஷிகா தேர்வு செய்யப்பட்டி ருக்கிறார்.
இவர் ஏற்கெனவே ‘பப்’ ஒன்றில் நடக்கும் கதையை மையமாக வைத்து உரு வான ‘திறந்திடு சீசே’ படத்தில் மது அருந்துபவர் போல் அசால்டாக நடித்து அப்ளாசை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கபாலி’யில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திர ங்களில் நடிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கி றார்கள்.
மலேசியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவ தற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.