போதைக்காக நச்சு கலப்பு? - டாஸ்மாக் மதுக்கடைகளை ஆய்வு செய்யக்கோரி வழக்கு

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில், கூடுதல் போதைக்காக நச்சுத் தன்மை கொண்ட ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பொதுநல வழக்கு மைய அமைப்பாளர் கே.கே. ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை குடிப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான நிறுவ னங்கள் மதுவகைகளை விநியோ கம் செய்கி ன்றன. இந்த மதுபானங்கள் தரமாக இல்லை. 

போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் அதிக அளவில் மதுபான ங்களில் கலக்கப் படுகின்றன. இதைத் தடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எந்த உறுதியான நடவடிக்கையும்எடுப்பதில்லை. 

தரமற்ற மதுபானங்களை தொடர்ந்து குடிப்பதால் மூளை, நுரையீரல், கல்லீர ல், சிறுநீரகம், பாலின உறுப்புகள் பாதிக்கப்படு கின்றன. பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

மது அருந்தி வாகனங்களை இயக்குபவர் களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மதுபானங்களில் போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங் கள் கலப்பதை தடுக்க வேண்டும். 

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு 6.7.2015-ல் மனு அனுப்பினேன். அதன் அடிப்படை யில் டாஸ்மாக் கடைகளில் விற் பனை செய்யப்படும் மதுபானங் களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க தலை மைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

டாஸ்மாக் மதுபானங் கள் குடிக்க தகுதியானவையா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசார ணைக்கு வருகிறது.
Tags:
Privacy and cookie settings