நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதிக்காத வரை தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசியல் லாபத்திற்காகவும், ஒட்டு வாங்குவதற்காகவும் வார்த்தைகளை விடும் கட்சி காங்கிரஸ் கட்சி கிடையாது.
எதை செய்தாலும் நன்கு யோசித்து செய்வோம், மற்ற கட்சிகள் பூரண மதுவிலக்கு தேவை என்கிறார்கள். ஆனால் அது சாத்தியமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.
இளங்கோவன் இன்று முழு கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஏனில் அவர் ராகுல் காந்தியுடன் கலந்து ஆலேசித்திருப்பார் ஆகவே இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் மட்டும் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறவில்லை, அனைத்து கட்சிகளுக்கும் தெரியும் மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது.
இல்லையனில் நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும். நாடு முழுவதும் மதுவுக்கு தடை விதிக்காத வரை தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என்றார்.