ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மோட்டார் சைக்கிளில் பச்சை முகமூடி அணிந்து ஒரு மர்ம மனிதன் வளம் வருகிறான்.
அந்த மர்ம மனிதன் தன்னந்தனியாக வரும் பெண்களை கண்டால் தனது கையில் உள்ள ஊசியால் பின்புறம் குத்தி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறான்.
இவ்வாறாக 20 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கபட்டு உள்ளனர்.அவன் கணவருடன் செல்லும் பெண்களையும் அவன் விட்டு வைப்பதில்லை.இந்த சம்பவம் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் கடந்த 22 ந்தேதி யாத கந்தாலா கிராமத்தில் தொடங்கியது. இதில் பால வெங்கட்ட லட்சுமி, கனக மகாலட்சுமி,பார்வதி, சிந்து,னாக குமாரி,சரோஜினி ஆகியோர் இவ்வாறு தாக்கபட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 22 ந்தேதி யாத கந்தாலா கிராமத்தில் தொடங்கியது. இதில் பால வெங்கட்ட லட்சுமி, கனக மகாலட்சுமி,பார்வதி, சிந்து,னாக குமாரி,சரோஜினி ஆகியோர் இவ்வாறு தாக்கபட்டு உள்ளனர்.
வாலிபரின் இந்த விஷம தாக்குதலால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர். 'எயிட்ஸ்' போன்ற கொடிய விஷகிருமி கொண்ட ஊசியால் தாங்கள் தாக்கப் படுவதாக அவர்கள் கருதிய தால் போலீசில் புகார் செய்தனர்.
சைக்கோ வாலிபரின் விஷம செயல் பற்றி தினந் தோறும் புகார்கள் வரவே போலீசார் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பாலகோடேடு, வீராவரம் போலீஸ் நிலையத்தில் மட்டுமே 9 புகார்கள் பதிவாகி உள்ளது. 6 பெண்கள் பீமாவரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெண்களை நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டு தங்களுக்கு தலைவலி கொடுத்து வரும் அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பெண்களை நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டு தங்களுக்கு தலைவலி கொடுத்து வரும் அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர்.
சைக்கோ வாலிபர் பற்றிய அங்க அடையாளங்களை பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேட்டு தெரிந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி அவனது உருவ மாதிரியை கம்ப்யூட்டரில் வரைந்து வருகிறார்கள்.
விரைவில் அந்த படம் வெளியிடப்படும் என்றும் அவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் ஆந்திர மாநில டி.ஜி.பி. தாகூர் அறிவித்து உள்ளார்.
வாலிபரை பிடிக்க 160 சிறப்பு போலீஸ் படை அமைக் கப்பட்டு இருப்ப தாகவும் அவர் கூறினார்.மாவட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்காணிக்கப்படுவதா கவும், விரைவில் அவன் சிக்கி விடுவான் என்று பெ£து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தாகூர் கூறினார்.
இதற்கிடையே மர்ம வாலிபரின் ஊசி தாக்கு தலுக்குட்பட்ட 19 பெண்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.அதில் வாலிபர் விஷ ஊசியால் தாக்காமல் தையல் ஊசியால்தான் தாக்கி இருக்கிறான் என தெரிய வந்து உள்ளது.

இது போலீசாருக்கு நிம்மதியை அளித்து உள்ளது ஆனால் பெண்கள் நகரில் நடமாடவே பயந்து வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.