அரசு சான்றிதழில் ஏழுமலையான் படம்... சேலம் கலெக்டரின் அதீத பக்தி !

அனைவருக்கும் பொதுவான அரசுப் பணியில் இருக்கும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், தான் வழங்கிய நற்சான்றிதழில் திருப்பதி ஏழுமலையான் சாமி படத்தை அச்சிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 Salem collector in new controversy
சேலம் மாவட்டத்தில் நேற்று சுதந்திர தின விழா காந்தி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் சம்பத் வழங்கினார்.

இவர் வழங்கிய அனைத்து அரசு சான்றிதழ்களின் பின்னணியிலும் திருப்பதி ஏழுமலையான் படத்தை அச்சிட்டு அதற்குமேல் சான்றிதழ் பெறும் அதிகாரிகள் பெயர் மற்றும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆட்சியர் சம்பத் தீவீர பெருமாள் பக்தராம் அவர் பொறுப்பேற்ற நேரம் இரவு 12 மணியாம்.

நற்சான்றிதழ்களில் கடவுள் படம் அச்சிடப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக மக்கள் உரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வண்ணம் இந்த செயல் உள்ளதாக தெரிவித்துள்ளன.
Tags:
Privacy and cookie settings