எனது கணவருக்கு என்னுடைய பாதுகாப்பு குறித்து எல்லாம் கவலையில்லை, அழகான பெண்கள் மீதுதான் கவலை உள்ளது என்று சோம்நாத் பார்தியின் மனைவி லிபிகா கடுமையாக தாக்கிஉள்ளார்.
டெல்லி சட்டசபையில் விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது கருத்து தெரிவித்த முன்னாள் மாநில சட்டமந்திரியான சோம்நாத் பார்தி “டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் (பாதுகாப்பு விவகாரம்),
அழகான பெண்கள் நள்ளிரவும் பயம் இல்லாமல் வெளியே செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் டெல்லியில் முழு பாதுகாப்பு வழங்குவோம்,” என்று கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக அவருடைய மனைவி லிபிகா பேசுகையில், நானும் சராசரி அழகு கொண்ட பெண்தான், எனவேதான் என்னையும் அப்படி நடத்தினார் என்று நினைக்கிறேன்.
எனது கணவருக்கு என்னுடைய பாதுகாப்பு குறித்து எல்லாம் கவலையில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார். அவருடைய கவலையெல்லாம் அழகான பெண்கள் மீதுதான் உள்ளது. என்று விமர்சித்து உள்ளார்.
சோம்நாத் பார்தியின் மனைவியான லிபிகா பார்தி டெல்லி தேசிய பெண்கள் ஆணையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கணவர் சோம்நாத் பார்தி தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று சோம்நாத் பார்திக்கு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், பெண்கள் மீதான சோம்நாத் பார்தியின் எண்ணங்கள் அனைத்தும் கவலைக் குரியது. இதுபோன்ற கருத்துக்கள் கண்ணியமானது கிடையாது. என்று கூறிஉள்ளார்.