ஐந்து விதமான டெஸ்ட்களை செய்ய உதவும் ஒரு கருவி!

நியூயார்க் நகரில் நடந்த எலக்ட்ரானிக் பொருள் நுகர்வோர் கூட்டத்தில் ‘ஸ்டார் டிரெக்’ நிறுவனம் ஒரு ஆரோக்கிய அளவீட்டு கருவியை அறிமுகம் செய்தது.
5 விதமான டெஸ்ட்களை செய்ய உதவும் கருவி!


‘வையடாம் செக்மீ’ என்று பெயரிடப் பட்டுள்ள இந்தக் கருவி மருத்துவ ஆய்வகங் களிலும், வீட்டிலும் எளிதான பரிசோத னைகளை செய்ய உதவுகிறது. 

ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, இதயத் துடிப்பு ஆகியவற்றை இதில் பரிசோதனை செய்யலாம்.

வெளிப்புறம் ஆட்காட்டி விரலை பதிக்கும் பள்ளத்தில் விரலை வைத்தால் அதில் உள்ள சென்சார் கருவி மேற்கண்ட வற்றுக்கான தகவல்களை திரட்டிக் கொள்ளும்.

அத்துடன் நடைப யிற்சியின் போது நடையின் எண்ணிக்கை, தூரம், எரிக்கப்பட்ட கலோரி களின் எண்ணிக்கை,

எரிக்கப் பட்ட கொழுப்பின் அளவு ஆகியவ ற்றையும் திரையில் காட்டும். சில அங்குல அகலமுள்ள இந்தக் கருவி ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனை க்கு வருகிறது.
Tags:
Privacy and cookie settings