கூகுள் நிறுவனம் மேப்ஸ் செயலியில் ஆஃப்லைன் மோடு எனும் அம்சத்தினை அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் மூலம் பயனர்களின் இண்டர்நெட் சேமிக்கப்படும்.
இதற்கு முன் கூகுள் மேப்ஸ் செயலியினை பயனம் செய்யும் போது பயன்படுபடுத்துவது சற்று கடினமான காரியமாகவே இருந்தது.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் ஆஃப்லைன் ஆப்ஷனை வழங்கி இருக்கின்றது,
இதன் மூலம் தேவையான இடத்தை பதிவிறக்கம் செய்து அதற்கான வழியினை சேவ் செய்து கொள்ள முடியும்.
இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
நெட்வர்க்
ஸ்மார்ட்போன் வை-பை அல்லது மொபைல் நெட்வர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி செய்து கொள்ளுங்கள்.
கூகுள் மேப்ஸ்
இண்டர்நெட் உடன் கனெக்ட் ஆன பின் கூகுள் அக்கவுன்டை சைன் இன் செய்து, கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனினை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் ஓபன் செய்ய வேண்டும்.
சர்ச்
உங்களுக்கு தேவையான இடத்தை டைப் செய்து சூம் சென்று உங்களுக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
மெனு
இடத்தை தேர்வு செய்த பின் மெனு பட்டனை க்ளிக் செய்து சேவ் மேப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
டவுன்லோடு
அடுத்து கீழ் பக்கமாக ஸ்க்ரால் செய்து சேவ் ஆஃப்லைன் மேப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆஃப்லைன் மேப்
ஆஃப்லைன் மேப்களை பார்க்க கூகுள் மேப்ஸ் ஆப் சென்று மெனுவில் 'ஆஃப்லைன் மேப்ஸ்' ஆப்ஷனை க்ளிக் செய்து சேவ் செய்த இடங்களை பார்க்க முடியும்