காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு விஜய்க்கு நன்றி' !

1 minute read
காசி திரையரங்கில் நடக்கும் வாலு படத்தின் சிறப்புக் காட்சி பார்க்க இன்று காலை தியேட்டருக்கு வந்தார் நடிகர் சிம்பு. அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 
 Simbu watches Vaalu along with fans
சிம்பு நடித்த வாலு திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று காலை 10 மணிக்கு காசி திரையரங்கில் தொடங்கியது.

காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சி போட இதே திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் ரத்தாகிவிட்டன.

இந்த நிலையில் 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்தனர். 

சிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தார் சிம்பு.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings