உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே உச்ச வேகத்தில் வேலை செய்யும் நம்மைப் போன்றோர் களுக்கு இன்டர்நெட் பேங்கிங் சேவை மிகவும் தேவை. ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாம் சற்று அசந்தால் போதும் நம்முடைய ‘பாஸ்வேர்டு’ அல்லது ‘கணக்கு எண்ணை’ கொண்டு வேறு யாராவது ஒருவர் இரகசியமாக ஒரே நொடியில் நம்மை ஓட்டாண்டியாக மாற்றும் நிலை இதில் ஏற்பட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரு வகையில் நமக்கு வேகமாக காரியம் நடந்து விட்டாலும், அதிலும் சில நிறைகுறைகள் உண்டு.
நாம் சற்று அசந்தால் போதும் நம்முடைய ‘பாஸ்வேர்டு’ அல்லது ‘கணக்கு எண்ணை’ கொண்டு வேறு யாராவது ஒருவர் இரகசியமாக ஒரே நொடியில் நம்மை ஓட்டாண்டியாக மாற்றும் நிலை இதில் ஏற்பட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே ஆன்லைனில் எப்படி பாதுகாப்பாக பண பரிவர்த்தனை செய்வது என்று பார்ப்போம்.
• உங்களுடைய வங்கி முகவரியின் யுஆர்எல்லை எப்பொழுதுமே அட்ரஸ் பாரில் மட்டுமே டைப் செய்யவும்.
• ஒரே சமயத்தில் பல்வேறு விண்டோக்கள் திறப்பதை அறவே விட்டொழியுங்கள்.
• உங்களுடைய யூசர் ஐடி, பாஸ்வேர்டு, பிறந்த நாள், ஐபிஐஎன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
• உங்களுடைய ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருங்கள்.
• நீங்கள் முகவரியை டைப் செய்யும் போது அது http:// என்றில்லாமால் https:// என்று தொடாங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
• ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்து முடித்த வுடன் முறையாக அதனை ‘லாக்-ஆஃப்’ செய்து விட்டு
அதனை மீண்டும் ஒருமுறை சரியாக செய்திருக்கிறோமா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.
அதனை மீண்டும் ஒருமுறை சரியாக செய்திருக்கிறோமா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.
• எப்பொழுதுமே நடப்பிலுள்ள புதிய ‘ஆன்ட்டி வைரஸ்’ மற்றும் ‘ஸ்பைவேர்’-களை பயன்படுத்துவது உங்கள் கம்ப்யூட்டரை பிற ஊடுருவல் தாக்குதல் களிலிருந்து காக்கும்.
• இரண்டடுக்கு பாதுகாப்பு பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது.
• உங்களுடைய வங்கி கணக்கு எண், பெயர் அல்லது பாஸ்வேர்டு ஆகியவை தானாகவே ஆன்லைன் பேங்கிங் பக்கத்தில
தோன்றினால் அங்கிருக்கும் ‘ஆட்டோ-கம்ப்ளீட்’ என்ற இடத்தை ரத்து செய்வது உங்களுடைய பாதுகாப்பினை அதிகரிக்கும்.
தோன்றினால் அங்கிருக்கும் ‘ஆட்டோ-கம்ப்ளீட்’ என்ற இடத்தை ரத்து செய்வது உங்களுடைய பாதுகாப்பினை அதிகரிக்கும்.
‘ஆட்டோ கம்ப்ளீட்’-ஐ ரத்து செய்வதற்கான வழிமுறைகள்:
1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறந்து அதில் உள்ள ‘டூல்ஸ்’ மெனுவில் ‘இன்டர்நெட் ஆஃப்சன்ஸ்’ என்ற பகுதியில் ‘கன்டென்ட்’-ஐ தேர்ந்தெடுக்கவும்.
2. அதில் ‘பர்சனல் இன்பர்மேஷன்’ டேப் பகுதியில் ‘ஆட்டோ கம்ப்ளீட்’-ஐ ‘க்ளிக்’ செய்யவும்.
3. தொடர்ச்சியாக, அதில் ‘படிவங்களில் பயன் படுத்துபவர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு’
என்ற பகுதியை தடை செய்து விட்டு, ‘பாஸ்வேர்டை அழித்தல்’ என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
என்ற பகுதியை தடை செய்து விட்டு, ‘பாஸ்வேர்டை அழித்தல்’ என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.
4. பிறகு ‘ஓகே’ என்று பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
• ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்லைன் பேங்கிங் சேவைகளை நீங்கள் பயன்படுத்து பவராக இருந்தால், ஒவ்வொன்று க்கும் தனித்தனி யான பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள்.
• ஒவ்வொரு முறை ஆன்லைன் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் போதும் கடைசியாக அதனை பயன்படுத்திய நாள் மற்றும் நேரத்தை கவனித்து வரவும்.
• மின்னஞ்சலில் வரும் எந்த ஒரு ‘லிங்க்’கையும் கிளிக் செய்து ஆன்லைன் பேங்கிங் பக்கத்திற்கு செல்ல வேண்டாம்.