கணணி மென்பொருட்களின் சீரியல் இலக்கங்களை அறிய வேண்டுமா?

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொரு ட்களை நிறுவி பயன் படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொ ருட்களும் அடங்கும். 
கணணி மென்பொருட்களின் சீரியல் இலக்கங்களை அறிய வேண்டுமா?
கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொரு ட்களுக்கு (Licensed softwares) வைத்திரு ப்பீர்கள்.

இந்த மாதிரி மென்பொ ருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.

நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத் திருக்க மாட்டார்கள். 

வைரஸ் காரணமாக கணணி செயலி ழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொ ருள்களை நிறுவ வேண்டியி ருக்கும்.

அப்போது தான் மென்பொ ருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக் கூடிய ஒரு இலவச மென் பொருள் தான் License Crawler.
இந்த மென்பொ ருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட் டிருக்கும் கட்டண மென்பொ ருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். 

பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தெரிவு செய்து கொள்ளவும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே செல்லவும்!
பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொரு ள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலி டப்படும். 

இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொ ருள்களின் லைசென் ஸ்களும் கிடைத்து விடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லா வற்றையும் சேமித்துக் கொள்ளலாம். 

Tags:
Privacy and cookie settings