சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும்
தமிழர்களும், பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உலகின் பிரபல தொழில்நுட்ப பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர்
மூலம் தெரிவித்து வரும் நிலையில் இந்த பட்டியலில் புதிதாக
இணைந்திருக்கின்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இது குறித்து விரிவான
தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ட்விட்டர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.
பதில்
பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக 'தங்களது
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.மோடி, தங்களை சந்திக்கும் நிகழ்வு விரைவில்
ஏற்படும்' என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சந்திப்பு
நரேந்திர மோடி சிலிகான் வேலி பயணம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களி ன் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலிகான் வேலி
சிலிகான் வேலியின் பெரிய தலைகளும் ட்விட்டர் மூலம் சுந்தர் பிச்சை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சத்யா நடெல்லா
தனது புதிய பதவி கிடைத்திருக்க வாழ்த்து தெரிவித்த சத்யா நடெல்லா, டிம் குக் ஆகியோருக்கும் சுந்தர் பிச்சை நன்றி தெரிவித்தார்.
எரிக் ஸ்கிம்டிட்
கூகுளின் எரிக் ஸ்கிம்டிட் தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் அவர்களின்
புதிய பதவி உயர்வு மகிழ்ச்சியை அளிப்பதோடு அவர் தனது பதவியை சிறப்பாக
மேற்கொள்வார் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது என
குறிப்பிட்டிருக்கின்றார்.
ப்ரெட் டெய்லர்
கூகுள் மேப்ஸ் இணை வடிவமைப்பாளரான ப்ரெட் டெய்லரும் தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
Thanks for Your Comments