கருணாநிதி சொல்வது ஆறுதலைத் தருகிறது : தமிழிசை!

மதுவிலக்கைக் கொண்டுவர முயற்சி செய்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பது ஆறுதலைத் தருகிறது என்று பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பூரண மதுவிலக்கு நேற்று கருணாநிதி பூரண மதுவிலக்கை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று ஓர் அறிக்கைவிட்டிருக்கிறார்.

திடீரென்று இந்த அறிக்கை வந்திருக்கிறது. சமூகத்தை மது சீரழிக்கிறது என்பதை அவர் இன்று புரிந்திருக்கிறார்.

மூத்த தலைவர் அவரை மதிக்கிறோம். ஆனால் தமிழகத்தில் ஓர் தலைமுறையையே குடிக்க வைத்து அவர்களின் வாழ்வை முடிக்க வைத்ததில் கருணாநிதிக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

ஆட்சியில் இருக்கும்போது மதுவிலக்கை கொண்டு வராதவர் ஆட்சிக்கு வந்தபின்பு மதுவிலக்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம் என்கிறார். அதுதான் வியப்பாக இருக்கிறது.

ஏன் இந்த நேரத்தில் சொல்கிறார், எதற்காகச் சொல்கிறார்? எதை நோக்கிச் செல்கிறார். தேர்தலை நோக்கியா? தமிழக மக்களின் தேறுதலை நோக்கியா என்ற சந்தேகம் எழுகிறது.

மதுவுக்கு எதிரான போராட்டம் இன்று இந்த சமுதாயத்தை ஓர் மிகப்பெரிய குடிகார சமுதாயமாக ஆக்கியதில் கருணாநிதிக்கு பெரிய பங்கு இருக்கிறது.

அதனால் சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை ஒழிக்க பூரண மதுவிலக்கை கோரும் கருணாநிதி குடிகார சமுதாயத்தை உருவாக்கியதற்காக, மன்னிப்பு கோர வேண்டிய நிலையிலும் இருக்கிறார். ஆனால் எது எப்படி இருந்தாலும்,

மதுவை ஒழிப்பதில் அத்தனை கட்சிகளும் ஒன்றிணைந்து திரண்டு போராட வேண்டிய நிலை இன்று வந்துவிட்டது. அந்த நிலையில் மதுவிற்கு ஓர் தலைமுறையே சீரழிய காரணமாக இருந்த கருணாநிதி கூட,

ஆட்சியில் இருக்கும் போது மதுக்கடைகளை மூட முடியாது என்ற கருணாநிதி கூட, மதுக்கடைகளை மூடுங்கள் என்று சொல்வது ஆறுதலைத் தருகிறது என்றே எடுத்துக்கொள்வோம்.

மது ஒழிப்பில் அனைவரும் மக்களோடு இணைந்து ஓரணியில் போராடுவது கூட பலன் தரும் என நினைக்கிறேன்.

பா.ஜ.க. மதுவுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings