சார்ஜர் மற்றும் வெளிப்புற மின்சார உபகரணங்கள் ஏதுமின்றி தானாகவே ஆட்டோமேட்டிக் காக சார்ஜ் செய்து கொள்ளும் புதிய நவீன ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கி றார்கள்.
ஸ்மார்ட்போன்களி லிருந்து வெளியாகும் ரேடியோ பிரிக்வென்ஸியை அப்படியே மின்சாரமாக மாற்றி பேட்டரியில் சேமித்துக் கொள்கிறது இந்த புதிய தொழில் நுட்பம்.
பொதுவாக, செல்போன் சிக்னல்களை ஈர்க்கும் போதுதான் ஸ்மோர்ட் போன்களின் 90 சதவீத மின்சாரம் வீணாகிறது.
புதிய தொழில் நுட்பத்தில் இதையே மின்சாரமாக மாற்றுவதால் வழக்கமாக இயங்குவதை விட 30 சதவீதம் கூடுதலாக ஸ்மார்ட் போன்களில் மின்சாரம் தாக்கு பிடிக்குமாம்.
புதிய தொழில் நுட்பத்தில் இதையே மின்சாரமாக மாற்றுவதால் வழக்கமாக இயங்குவதை விட 30 சதவீதம் கூடுதலாக ஸ்மார்ட் போன்களில் மின்சாரம் தாக்கு பிடிக்குமாம்.
அமெரிக்காவை சேர்ந்த நிகோலா லேப்ஸ் இந்த புதிய தொழில் நுட்பத்தை ஓஹியோ ஸ்டேட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து அடுத்த ஓராண்டிற்குள் சந்தையில் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.
இந்த புதிய தொழில் நுட்பத்தை செல்போன்கள் மட்டுமின்றி, கைகளில் அணியும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளிலும், சென்சார்கள் கொண்ட மருத்துவ உபகரணங்க ளிலும் கூட பயன்படுத்த முடியுமாம்.