இணையத்தை பயன்படுத்தும் போது தானகவே சில நேரங்களில் அதன் வேகம் குறைவதை உணர்வீர்கள்.
நீங்களாக கணினிக்கு கட்டளைகள் வழங்காத போதும் அதில் நிறுவியிருக்கும் சில புரோகிராங்கள் இணைய தொடர்பு கிடைத்ததும்
அதை பயன்படுத்த தொடங்கும் போதே வேகம் குறைந்து சாதாரணமாக பார்க்கும் தளங்களை கூட பார்க்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணினியில் இருந்து எந்த புரோகிராம் இணை யத்தை பயன்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அவற்றை நிறுத்தினால் வேகத்தை அதிகமாக்கலாமல்லவா?
இந்த வசதியை தருகின்ற மென்பொருளே TCPEye 1.0 ஆகும். இதை நிறுவி யதும் கணினியில் இருந்து இணையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தும் சாப் வேர்களை லிஸ்ட் செய்கிறது.
முக்கியமாக அவை எந்த நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்துகின்றது, எந் த புரோட்டோகோலை பயன்படுத்துகிறது,
ஐபி முகவரி போன்ற விபரங் களை பட்டியலிடுகிறது. (வேறு மென்பொருட்கள் இவ்வாறு நாடுகளை பட்டியலிடுவதில்லை)
இவற்றில் தேவையில்லை என்று நீங்கள் கருதுபவற்றை வலது கிளிக் செ ய்து end process மூலம் நிறுத்தி முழுமையான இணைய வேகத்தை பெறலாமல்லவா?