பேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?

ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். 
 பேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா?
உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே,

உங்களின் முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல் களை சைபர் குற்ற வாளிகள் தவறாகப் பயன் படுத்தவும் கூடும். 

டெய்லி மெயிலின் அறிக்கையின் படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறு வனமொன்றின் தொழில் நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் 

இங்கிலா ந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், சாத்தியமான எண் கூட்டை அமை க்க ஒரு நிரல் எழுதினார்.

அதில் கிடைத்த எண்களை அனைத்தையும், ஃபேஸ்புக் நிரலி உருவாக்க மென் பொருளுக்கு அனுப்பினார். 
உடனே ஆயிரக் கணக்கான தனி நபர்களின் சுய வி வரங்கள் தடை யில்லாமல் வந்து குவிந் திருக்கின்றன. 

இது குறித்து மொயாண்டின் மேலும் கூறியதாவது 

இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில் நுட்பம் தெரிந்த வர்கூட, பொது வெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றி யிருக்கும் 

ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருட முடியும்; பின்னர் அதையே மற்ற நிறுவனங்களுக்கு விற்கவும் முடியும்.

கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கிடம் இப்பாதுகாப்புப் பிரச்சனை குறித்துத் தெரிவித் த பின்னரும், அந்த ஓட்டைகள் அடைக்கப் படாமல் தான் இருக்கின்றன. 
இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்ச ஃபேஸ்புக் பயனாளிகள், தங்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், என்று கூறினார்.

சென்ற வருடத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின் படி, ராண்ட் கார்ப்ப ரேஷனின் தேசிய பாதுகாப்பு பிரிவு சில தகவல்களை வெளியிட்டி ருக்கிறது. 

அதன்படி, தனிநபர்களின் புகைப்படங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள், கல்வித் தகவல் மற்றும் வசிக்கும் இடங்கள் 

குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் இருக்கும் சட்ட விரோதமான வணிக தளங்களால் திருடப்ப டுகின்றன. 

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் அதிகம் உபயோகமானவை என்கிறது ராண்ட் நிறுவன ஆய்வு.
Tags:
Privacy and cookie settings