சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடி சலுகை... பிஎஸ்என்எல் !

1 minute read
சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி இணையதள இணைப்புக்கான மோடம் கட்டணம் ரூ.1,500ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிரீபெய்டில் ரூ.69 பூஸ்டர் பயன்படுத்தினால் 4 நாளுக்கு ரூ.49 க்கு பேசலாம். தவிர, 59 எஸ்.எம்.எஸ். 69 எம்.பி டேட்டா இலவசம். இது ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் அமலில் இருக்கும். ரூ.26 பூஸ்டரில் அதே மதிப்புக்கு பேசிக்கொள்ளலாம். 

பயன்பாட்டு காலமான 4 நாளும் தினமும் இரவில் 2 நிமிடம் பிஎஸ்என்எல் எண்ணுக்கு இலவசமாக பேசலாம். இது ஆகஸ்ட் 14 முதல் 60 நாளுக்கு அமலில் இருக்கும்.

இணையதள டேட்டா பூஸ்டர் பயன்பாட்டு காலம் ரூ.561 க்கு 60 நாட்களாகவும், ரூ.821, ரூ.1,011, ரூ.1,949 க்கு 90 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதே போல் ரூ.53, ரூ.78, ரூ.96, ரூ.198, ரூ.253, ரூ.451 பூஸ்டருக்கு டேட்டா அளவு 10% கூடுதலாக கிடைக்கும்.
இச்சலுகை வரும் 17 ஆம் தேதி வரை மட்டும் உண்டு என தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட துணை பொது மேலாளர் எம்.ராஜி அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings